அதிவேக ஆற்றல் வாய்ந்த பிராசஸருடன் வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்

மொபைல்கள் மூலமாக புதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுத்த வாடிக்கையாளர்களை ஆச்சர்யத்தில் மூழ்க செய்த எச்டிசி நிறுவனம் இப்பொழுது இன்னொரு ஆச்சர்யமான செய்தியையும் கொடுக்க உள்ளது.
குவாடு கோர் டெக்ரா-3 பிராசஸர் கொண்ட மொபைலை வழங்க இருக்கிறது எச்டிசி நிறுவனம். மல்டி டாஸ்க்கிங் பணிகளில் பிச்சு உதறும் திறன் வாய்ந்த இந்த பிராசஸர்கள் எதிர்கால மொபைல் சந்தையில் கலக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், குவாடு கோர் டெக்ரா-3 பிராசஸர் கொண்ட எட்ஜ் என்ற ஸ்மார்ட் மொபைலையும் முதலில் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது எச்டிசி.
டெக்ரா-2 பிராசஸருடன் வரும் மொபைல்களை அனைத்து நிறுவனங்களும் முயன்று வரும் நிலையில், எச்டிசி நிறுவனம் ஒருபடி மேலே போய் டெக்ரா-3 பிராசஸருடன் மொபைலை களமிறக்குவது சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய டெக்ரா-3 க்வேட் கோர் பிராசஸர் மூலம் மிக அதிக வேகத்தினையும், மல்டி டாஸ்கிங் வசதியினையும் பெறலாம். வேகம் என்று இதை சாதாரணமாக சொல்லி விட முடியாது.
சாதாரண ஸ்மார்ட் போனில் உள்ள வேகத்தை விட, 4 மடங்கு அதிக வேகத்தினை இந்த க்வேட் கோர் டெக்ரா-3 பிராசஸர் மூலம் வெகுகாக பெற முடியும்.
எச்டிசி எட்ஜ் மொபைலின் தோற்றம் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை, பார்ப்பவர்களால் நன்கு உணர முடியும்.இந்த மொபைல் 4.7 இஞ்ச் திரை தொழில் நுட்பத்தையும், என்விஐடிஐஏ ஏபி30 டெக்ரா-3 க்வேட் கோர் பிராசஸரையும் கொண்டதாக இருக்கும்.
அதோடு இதில் 8.0 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கிறது. இதனால் அழகான, புகைப்படத்தையும், துல்லியத்தையும் வெகுவாக பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒன்று. அதுவும் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும். இதில் எஃப்/2.2 லென்ஸ் வசதியும் உள்ளது.
32 ஜிபி வரை இன்டர்னல் மெமரியை எளிதாக உபயோகித்து பயன் பெறலாம். எச்எஸ்டிபிஏ, புளூடூத் போன்ற தொழில் நுட்பங்களின் பயன்பாடுகள் இதில் உண்டு. கேட்பதற்கே ஆர்வத்தைத் தூண்டும், இந்த புதிய தொழில் நுட்பம் கொண்ட எட்ஜ் மொபைல் வருகின்ற ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும்.
இந்த மொபைலின் விலை நிச்சயம் உயர்ந்த விலை கொண்ட ஸ்மார்ட் மொபைலின் பட்டியலில் இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications