நவீன வசதிகளுடன் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்!
டிஎல்எக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் ஆயுதத்துடன், ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்குகிறது எச்டிசி நிறுவனம்.
அப்படி கசிந்துள்ள இந்த தகவல் பற்றிய புதிய செய்திகளை பார்க்கலாம். பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல், அறிமுகமான பல புதிய ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேஷன் வசதியினையும் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் எச்டிசி டிஎல்எக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வழங்குவதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஃபுட்பால்4பிடிஏவில் வெளியான தகவலின்படி இதில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை பெற முடியும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ்
பிராசஸரையும் பெற முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மூலம் கிடைக்கும் தகவலை இதன் 5 இஞ்ச் பெரிய திரையில் காணலாம்.
இதில் இன்டர்னல் மெமரி மட்டுமே 16 ஜிபி வரை பெற முடியும். இதில் 12 மெகா பிக்ஸல் கேமாரவினையும், 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். இதில் 2,500 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் நீடித்து உழைக்கும் ஆற்றலையும் பெறலாம்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிகார பூர்வமான தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதன் தொழில் நுட்ப விவரங்கள் அதிகார பூர்வமாக வெளி வரும் போது, இதன் விலை விவரங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
