Home
Mobile

எச்டிசி மற்றும் சோனி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

எச்டிசி மற்றும் சோனி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

சமீபத்தில் அறிமுகமான எச்டிசி டிசையர் எக்ஸ் மற்றும் சோனி எக்ஸ்பீரியா யூ என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் மற்றும் தொழில் நுட்ப வசதிகளின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஒரு மிக பெரிய ஒற்றுமை என்னவென்றால் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாக இருக்கும். இதனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதிகளை பெறவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது பற்றி தகவல்கள் ஏதும் சரிவர வெளியாகவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் பெர்லினில் நடந்த ஐஎப்ஏ 2012 எக்ஸ்போ கண்காட்சியில், இந்த டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இதில் 4 இஞ்ச் அகன்ற திரையினையும், எல்சிடி திரை தொழில் நுட்பத்தினையும் பெறலாம். இந்த திரையில் தகவல்களை சிறப்பாக பெற 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பயன்படுத்த முடியும்.

எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை பயன்படுத்துவதோடு, 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். எக்ஸ்பீயா யூ மற்றும் டிசையர் எக்ஸ் ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வசதியினை கொடுக்கும்.

எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜிபி இன்டர்னல் வசதியினையும் பெறலாம். இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமராவினை எளிதாக பெற முடியும். இதில் டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. ஆனால் எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனில் சிறப்பாக விஜிஏ முகப்பு கேமரா வசதியினை பயன்படுத்தலாம்.

டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1,650 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும், எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனில் 1,320 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் பெறலாம். எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனின் பேட்டரியின் மூலம் 6.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 472 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

எச்டிசி டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,799 விலை கொண்டதாகவும், எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலை கொண்டதாகவும் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X