புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த எச்டிசி!

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். அதுவும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை கொண்டு இயங்கும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-1 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரின் துணையையும் கொண்டது.
புதிதாக அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் திரை வசதியும் கூட இங்கே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 3.5 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.
எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் 25ஜிபி ட்ராப்பாக்ஸ் ஸ்டோரேஜ் வசதியினையும் கொடுக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் வெளியாகும் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகும் என்றும் தகவல் கூறுகின்றது. ஆனால் எச்டிசி டிஸையர்-சி ஸ்மார்ட்போன் ரூ.13,800 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications