வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்: அசத்தலான HTC Desire 22 Pro அறிமுகம்.! விலை?

|

சில வருடங்களுக்கு முன்பு அதிகமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த எச்டிசி நிறவனம் இப்போது ஒரு சில ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்கிறது. ஆனால் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு சில போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருகிறது.

எச்டிசி டிசையர் 22 ப்ரோ

எச்டிசி டிசையர் 22 ப்ரோ

அதன்படி எச்டிசி நிறுவனம் தற்போது சற்று உயர்வான விலையில் எச்டிசி டிசையர் 22 ப்ரோமாடலை UK இல் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த HTC Desire 22 Pro ஆனது Metaverse-போகஸ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். எனவே இதைப் பயன்படுத்த அருமையாக இருக்கும்.குறிப்பாக எச்டிசிDesire 22 Pro போன் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080×2,412 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய போன்.

6.6-இன்ச் டிஸ்பிளேஎன்பதால் பிடித்து பயன்படுத்த அருமையாக இருக்கும். மேலும் இதன் டிஸ்பிளேவை விட இதன் சிப்செட் மிக அருமையாக உள்ளது.

Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..

சிறந்த மென்பொருள் வசதி

சிறந்த மென்பொருள் வசதி

புதிய டிசையர் 22 ப்ரோ போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு தகுந்தபடிஇந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் மட்டுமே இந்த எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!

தரமான கேமரா

தரமான கேமரா

எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் (f/1.79 aperture lens) + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (f/2.4) + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

 32எம்பி கேமரா

எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4520 எம்ஏச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 18W குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?

என்ன விலை?

என்ன விலை?

குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5.1,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை GBP 399 (இந்திய மதிப்பில் ரூ.38,550)-ஆக உள்ளது.வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி UK-இல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் முன்பதிவு இப்போது
தொடங்கியுள்ளது.

அதேபோல் இந்த சாதனம் மெட்டாவேர்ஸுக்கு (Metaverse) தகுந்தபடி வெளிவந்துள்ளதால், அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HTC Desire 22 Pro with 120Hz display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X