Home
Mobile

பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்: 8ஜிபி ரேம் உடன் HTC டிசையர் 21 ப்ரோ அறிமுகம்!

HTC டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 5ஜி எஸ்ஓசி செயலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

HTC Desire 21 Pro 5G ஸ்மார்ட்போன்

HTC Desire 21 Pro 5G ஸ்மார்ட்போன்

HTC Desire 21 Pro 5G ஸ்மார்ட்போன் தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டது. 5ஜி இணைப்பு ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ரேம் வேரியண்ட்டில் வருகிறது. எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி விலை

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி விலை

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை டிடபிள்யூடி 11,990 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.31,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு பிறகு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதிகரிக்கப்படும் விலை இந்திய மதிப்புப்படி ரூ.34,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்

இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்

எச்டிசி 21 டிசையர் ப்ரோ மிராஜ் ஊதா வண்ண விருப்பம் மற்றும் ஸ்டார் ஷிப் வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி அம்சங்கள்

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி அம்சங்கள்

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை நானோ சிம் ஆதரவு இருக்கிறது. 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 690 5ஜி எஸ்ஏசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி கேமரா

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி கேமரா

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் துளை பஞ்ச் கட்அவுட் அமைப்புடன் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

எச்டிசி டிசையர் 21 ப்ரோ 5ஜி இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில் வைஃபை, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Desire 21 Pro 5G Smartphone Launched with Snapdragon 690 5G SoC and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X