HTC டிசயர் 20+ குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம்.!

|

எச்.டி.சி நிறுவனம் தைவானில் HTC டிசையர் 20 பிளஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.புதிய ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய HTC டிசயர் 20+

புதிய HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன், டான் ஆரஞ்சு மற்றும் ட்விலைட் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த சாதனம் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் குவாட் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைரேகை சென்சார்கள் புதிய HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்

HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்
புதிய ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் எச்டி பிளஸ் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கக் கூடிய அம்சமும் இதில் உள்ளது.

கேமரா

HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ராவைடு லென்ஸ், 115 டிகிரி ஃபீல்ட்-வியூ, 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இது 5,000 எம்ஏஎச் கொண்ட பெரிய பேட்டரியுடன் எல்.டி.இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்திய மத்தின்படி இதன் விலை தோராயமாக ரூ. 21,700 ஆகும்.

Best Mobiles in India

English summary
HTC Desire 20+ announced with 48MP quad-camera, 5,000mAh battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X