5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போனில் 3075எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல்-சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.2, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
எச்டிசி நிறுவனம் இப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை, கடந்த சில மாதங்களில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் குறைவுதான் என்று கூறவேண்டும். இந்நிலையில் தைவான் நாட்டில் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எச்டிசி நிறுவனம்.

எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.13,900-ஆக உள்ளது, பின்பு கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 435:
எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் டோன் டெக்ஸ்டர் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போனில் 3075எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல்-சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.2, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications