Home
Mobile

ரூ.19,790/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.? சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு செக்.!

எச்டிசி நிறுவனமானது, டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் என்கிற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

By Muthuraj

எச்டிசி நிறுவனமானது, டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் என்கிற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஆனது முறையே ரூ.15,800/- மற்றும் ரூ.19,790/- என்கிற புள்ளியை எட்டியுள்ளது.

ரூ.19,790/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.?

சுவாரசியம் என்னவெனில், டிசையர் 12 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 ப்ளஸ்-க்கு கடுமையான போட்டியை உண்டாக்கியுள்ளது. அப்படி என்ன தான் அம்சங்களை கொண்டுள்ளதென்பதை விரிவாக காண்போம்.

முன்பதிவுகள் வருகிற ஜூன் 11 முதல் தொடங்குகிறது.!

முன்பதிவுகள் வருகிற ஜூன் 11 முதல் தொடங்குகிறது.!

பொதுவான அம்சங்களை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 18: 9 அளவிலான டிஸ்பிளே, எச்டிசி-யின் சிக்னேசர் வடிவமைப்பு, நிச்சயமாக சாதாரண குறிப்புகள் மற்றும் நியாமான விலையை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே எச்டிசி இந்தியா இ- ஸ்டாரின் வழியாக வாங்க கிடைக்கும், அதற்கான முன்பதிவுகள் வருகிற ஜூன் 11 முதல் தொடங்குகிறது, தேதியை குறித்துக்கொள்ளவும்.

எச்டிசி டிசையர் 12 அம்சங்கள்.!

எச்டிசி டிசையர் 12 அம்சங்கள்.!

வெளியான இரண்டு ஸ்மார்ட்போன்களில் எச்டிசி டிசையர் 12, ஒரு சிறிய ஸ்மார்ட்போன் ஆகும். ஒரு 5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கூடிய 720 x 1440 பிக்சல்கள் தீர்மானத்தை வழங்குகிறது. உடன் மீடியா டெக் MT6739 சிப்செட் உடனான 3ஜிபி ரேம் உடன் இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

32ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி மெமரி நீடிக்கும் ஆதரவையும் வழங்குகிறது. பின்புறத்தில், PDAF, BSI சென்சார், எப் / 2.0 துளை மற்றும் பொக்கே மோட் போன்ற அம்சங்களை கொண்ட ஒற்றை 13 எம்பி கேமராவை கொண்டுள்ளது. மறுகையில் எப் / 2.4 துளை கொண்ட 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. உடன் இரட்டை சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான எச்டிசி சென்ஸ் யூஐ, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 2730mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

எச்டிசி டிசையர் 12 ப்ளஸ் அம்சங்கள்.!

எச்டிசி டிசையர் 12 ப்ளஸ் அம்சங்கள்.!

பெரிய மாடல் ஆன எச்டிசி டிசையர் 12 ப்ளஸ் ஆனது இரட்டை கேமராக்கள் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த செயலி ஆகியவைகளை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனாக உள்ளது. இது 720 × 1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டு வருகிறது. க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 450 எஸ்ஓசி உடனாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் லிக்விட் சர்பேஸ் டிசைன் திட்டத்தின் வெளியாகியுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.!

இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2 டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி டிசையர் 12-ஐப் போலவே ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான எச்டிசி சென்ஸ் யூஐ கொண்டு இயங்குகிறது. பின்புறத்தில் ஒரு 13 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை எப் / 2.0 துளை கொண்ட ஒரு 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 3.5மிமீ ஹெட்ஜாக், ஒரு 2965mAh பேட்டரி ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Desire 12+ is Here to Compete With the Samsung Galaxy A6+ at Rs 19,790. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X