அறிமுகம்: எச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் (அம்சஙகள்).!

இவ்விரு தொலைபேசிகளும் 18: 9 என்கிற காட்சி விகிதங்களை கொண்டுள்ளது.

|

எச்டிசி நிறுவனம் அதன் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் ஆகிய இரண்டு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு தொலைபேசிகளும் 18: 9 என்கிற காட்சி விகிதங்களை கொண்டுள்ளது.

அறிமுகம்: எச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் (அம்சஙகள்).!

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், எச்டிசி டிசயர் 12 ஆனது 185 யூரோவிலிருந்து (தோராயமாக ரூ.14,800) தொடங்கும். மறுகையில் உள்ள டிசையர் 12 ப்ளஸ் ஆணையு 235 யூரோக்கள் (கிட்டத்தட்ட ரூ.18,900) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். இவ்விரு கருவிகளும் பிளாக் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். ஏற்கனவே முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ள டிசையர் 12 ப்ளஸ், அதன் விற்பனையை அடுத்தமாத தொடக்கம் முதல் தொடங்கும்.

எச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 ப்ளஸ் அம்சங்கள்

சிறிய மாறுபாடான டிசையர் 12 ஆனது ஒரு 5.5 அங்குல எச்டி + (720x1440 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேயு, 18: 9 என்கிற திரை விகிதம், 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி / 32ஜி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, மீடியா டெக் எம்டி6739 எஸ்ஓசி, மைக்ரோஎஸ்டி அட்டை வழியிலான மெமரி விரிவாக்கம், ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 2730எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள எச்டிசி டிசையர் 12 ப்ளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, ஒரு பெரிய 5.99 அங்குல எச்டி+ (720x1440 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, அதே 18: 9 என்கிற திரை விகிதம், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி, 3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கம், 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் சென்சார் என்கிற அளவிலான இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா,பேஸ் அன்லாக் அம்சம், ஒரு பெரிய 2956எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி எல்டிஇ, 3.5மிமீ ஹெட்ஜாக், மைக்ரோ-யூஎஸ்பி, ஜிபிஎஸ் மற்றும் க்ளோநாஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. இரண்டு கருவிகளில் பெரிய மாறுபாட்டில் மட்டுமே பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Best Mobiles in India

English summary
HTC Desire 12, Desire 12+ with 18:9 Displays Launched: Price, Specifications, Features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X