Home
Mobile

டீலக்ஸ் போனின் படங்களை வெளியிட்டிருக்கும் எச்டிசி

By Karthikeyan
டீலக்ஸ் போனின் படங்களை வெளியிட்டிருக்கும் எச்டிசி

கடந்த வாரம் எச்டிசி நிறுவனம் வெரிசான் நிறுவனத்தோடு இணைந்து ட்ராய்டு டிஎன்எ என்று புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தது. இந்த போனிற்கு எச்டிசி டீலக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த போன் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில் இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது எச்டிசி. இந்த நிலையில் சமீபத்தில் எச்டிசி இந்த புதிய போனின் படங்களைக் கசியவிட்டிருக்கிறது. ஆனால் இந்த போனைப் பற்றியத் தகவல்கள் எதையும் எச்டிசி வெளியிடவில்லை,

எச்டிசி வெளியிட்டிருக்கும் படத்தின்படி இந்த ட்ராய்ட் போன் வெள்ளை மற்றும் ப்ரவுன் ஆகிய நிறங்களில் வருகிறது. ஆனால் மற்ற எந்த தொழில் நுட்பங்களையும் இந்த படத்தைப் பார்த்தபடி கூறமுடியாது. ஆனால் இந்த போனின் பின்புறம் பீட்ஸ் ஆடியோவின் முத்திரை இருப்பதால் இந்த போனில் பீட்ஸ் ஆடியோ இருக்கிறது என்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் எச்டிசி இந்த டீலக்ஸ் போனின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே டுவிட்டரில் இந்த போனைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டுவிட்டரில் வந்த செய்திகளின்படி பார்த்தால் இந்த எச்டிசி டீலக்ஸ் போன் 5 என்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் 1080பி எச்டி சூப்பர் எல்சிடி3 மற்றும் கார்னிங் கொரில்லா க்ளாஸ் வசதிகள் உள்ளன.

மேலும் இந்த டீலக்ஸ் போன் 1.5 ஜிஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எ4 குவாட்கோர் ப்ராசஸர், 8எம்பி பின்பக்கக் கேமரா, 2ஜிபி ரேம், 16ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் இயங்கு தளம், வைபை, ப்ளூடூத் மற்றும் பீட்ஸ் ஆடியோ போன்ற வசதிகளுடன் வருகின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X