குறைந்த விலையில் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

By Super
|

குறைந்த விலையில் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!
இப்பொழுது நிறைய மொபைல்களுக்கும், ஸ்மார்ட்போன்களுக்கும் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதில் எச்டிசி நிறுவனமும் சேரும்.

எச்டிசி சென்சேஷன் என்ற ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினை கொடுப்பதோடு, எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரையின் மூலம் தெளிவான தகவல்களையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.24,000 விலையில் இருந்து இப்போது ரூ.22,000 விலை வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் எச்டிசி இன்க்ரெடிபில் எஸ் ஸ்மார்ட்போனையும் 24,000 விலையில் இருந்து ரூ.20,000 விலையில் பெறலாம். அதிக தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இது போன்று குறைந்த விலையில் கிடைப்பது என்பது அபூர்வம்.

மேல் கூறப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டும் அல்லாமல் இங்கே டிசையர் எஸ் ஸ்மார்ட்போனை ரூ.22,000 விலையில் இருந்து 19,000 விலைக்கு வழங்குகிறது எச்டிசி நிறுவனம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 3

ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவது தான்.

கூடிய விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாக இருக்கும் எச்டிசி ஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை வழங்குவதன் மூலம் குறைந்த காலத்திலேயே மக்களின் மத்தியில் சிறந்த பெயர் பெற்றுள்ளது எச்டிசி நிறுவனம்.

இத்தகைய சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெறுவது என்பது இன்னும் சிறப்பான விஷயம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X