அதிரடி...16 ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேஷன் கொடுக்கும் எச்டிசி!

ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் பெரும்பாலான வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிற ஒன்று. இந்த அப்டேஷனை சென்சேஷன், சென்சேஷன் எக்ஸ்இ, சென்சேஷன் எக்ஸ்எல், டிசையர் எஸ், டிசையர் எச்டி, இவோ 3டி, இன்க்ரெடிபில் எஸ், ரைம், டிராய்டு இன்க்ரெடிபில்-2, அமேசான் 4ஜி, எச்டிசி இவோ டிசைன் 4ஜி, சென்சேஷன் 4ஜி ரெய்டர், ரீசவுன்டு, தன்டர்போல்டு, விவிட் என்று சரமாரியாக 16 ஸ்மார்ட்போன்களுக்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.
தய்வான் நிறுவனமான எச்டிசி, சரவெடிபோல் 16ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வசதியினை கொடுப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தான். புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடுவதோடு மட்டும் அல்லாமல், அந்த ஸ்மார்ட்போன்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை அப்டேட் செய்வது வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் சிறந்த சேவையாகவே கருதப்படுகிறது.
எச்டிசி நிறுவனம் இது போல் இன்னும் பல வசதிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த அப்டேஷன் சவுகரியத்தினை பெறலாம்.


Click it and Unblock the Notifications