அடேங்கப்பா சூப்பரான டிஸ்பிளே: தரமான HTC A101 டேப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

எச்டிசி நிறுவனம் சமீபத்தில் தான் எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

எச்டிசி ஏ101 டேப்லெட்

எச்டிசி ஏ101 டேப்லெட்

தற்போது இந்த எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தபுதிய டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலின்

இப்போது எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது கிரே மற்றும் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது 10-இன்ச் எல்சடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் ஆனது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு 1920 x 1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
டேப்லெட் மாடல்.

Realme சொல்லிருச்சு வாத்தி கம்மிங்.. எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?Realme சொல்லிருச்சு வாத்தி கம்மிங்.. எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

எச்டிசி ஏ101 டேப்லெட் மாடலில் Unisoc T618 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட்-இன் செயல்திறன் அருமையாக இருக்கும். பின்பு இந்த புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

புதிய எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒருரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

எச்டிசி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலில் 16எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது. மேலும்
720p வீடியோ ரெக்கார்டிங், பியூட்டி மோட் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட்.

இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான எச்டிசி ஏ101 டேப்லெட்மாடல்.

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த எச்டிசி ஏ101 டேப்லெட் ஆனது 7000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்டிசி
டேப்லெட் மாடல்.

என்ன விலை?

என்ன விலை?

அதேபோல் வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 5.0, எல்டிஇ, 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எச்டிசி ஏ101 டேப்லெட். மேலும் புதிய எச்டிசி ஏ101 டேப்லெட் விலை RUB 19,890 (இந்திய மதிப்பில் ரூ.28,400) ஆகஉள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எச்டிசி டிசையர் 22 ப்ரோ

எச்டிசி டிசையர் 22 ப்ரோ

எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080×2,412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 5ஜி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த எச்டிசி போன்.

எச்டிசி டிசையர் 22 ப்ரோ கேமரா

எச்டிசி டிசையர் 22 ப்ரோ கேமரா

எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் (f/1.79 aperture lens) + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (f/2.4) + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே
32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

  4520 எம்ஏச் பேட்டரி

4520 எம்ஏச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போன் 4520 எம்ஏச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 18W குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது.

எச்டிசி டிசையர் 22 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை GBP 399 (இந்திய மதிப்பில் ரூ.38,550)-ஆக உள்ளது.வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி UK-இல் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HTC A101 Tablet with 7,000mAh Battery Launching in China on July 12: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X