Home
Mobile

எச்டிசி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super

எச்டிசி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
எச்டிசி 8எக்ஸ் மற்றும் ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் பற்றி சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போன்களின் மற்ற தொழில் நுட்ப வசதிகளையும் எப்படி என்று பார்க்கலாம்.

எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போன் 130 கிராம் எடை கொண்டதாகவும், சாம்சங் ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 135 கிராம் எடை வசதியினை கொண்டதாகவும் இருக்கும். இதனால் சாம்சங் ஸ்மார்ட்போனை விடவும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் சற்று குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.

8எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையின் மூலம் சூப்பர் எல்சிடி 2 திரை தொழில் நுட்பத்தினை பெற முடியும். இதன் தொடுதிரை வசதி 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதியினையும் கொண்டதாக இருக்கும். இதில் 1280 X 720 பிக்ஸ்ல திரை துல்லியத்தினை பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போன்கள் சிறப்பான திரை தொழில் நுட்பத்தினை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கவசத்தினையும் கொண்டதாக இருக்கும். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல்கோர் பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸரையும் வழங்கும்.

கிட்டத்தட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நிறைய தொழில் நுட்ப வசதிகள் ஒத்து போவதை காணலாம். எச்டிசி 8எக்ஸ் மற்றும் சாம்சங் ஏட்டிவ் எஸ் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும்.

இதன் மூலம் ஆட்டோ ஃபேக்கஸ், லெட் ஃபிளாஷ் மற்றும் ஜியோ டேகிங் ஆகிய வசதிகளை பெற முடியும். எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.1 மெகா பிக்ஸல் கேமராவினையும், ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக இதில் பெற முடியும்.

எச்டிசி 8எக்ஸ் ஸ்டோரேஜ் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வெர்ஷன் வசதியினையும் பெற முடியும். எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 எம்ஏஎச் பேட்டரியினையும், ஏட்டிவ் எஸ் ஸ்மார்ட்போன் 2,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் கொண்டாதக இருக்கும். செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X