எச்டிசி மற்றும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
|

எச்டிசி மற்றும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2.1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெற முடியும்.

நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் 8.7 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். இதனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் டியூவல் கேமரா வசதியினை பயன்படுத்தி சிறப்பான புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் போன்ற தொழில் நுட்ப வசதிகளை பெறலாம். அதிலும் நோக்கியா லுமிய-920 ஸ்மார்ட்போன் ப்யூர்வியூ தொழில் நுட்பம் கொண்ட கேமரா வசதியினை அளிக்கும்.

இந்த ஸ்மார்ட்போன்களின் இன்டர்னல் மெமரி வசதி வேறுபடுகிறது. எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெற முடியும். லுமியா-920 ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம்.

அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 7 ஜிபி வரை ஃப்ரீ மைக்ரோசாஃப்ட் ஸ்கைடிரைவ் ஸ்டோரேஜ் வசதியினை பயன்படுத்தலாம். ஆனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ள மைக்ரோஎஸ்டி ஸ்லாட்கள் சப்போர்ட் செய்கிறது.

எச்டிசி 8எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியையும், லுமியா-920 ஸ்மார்ட்போன் 2,000 எம்ஏஎச் பேட்டரியையும் வழங்கும். இதனால் லுமியா-920 ஸ்மார்ட்போனில் 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினை பெறலாம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X