Home
Mobile

இந்திய மொபைல் சந்தையில் எச்டிசியின் 4 புதிய ஸ்மார்ட்போன்கள்

By Karthikeyan
இந்திய மொபைல் சந்தையில் எச்டிசியின் 4 புதிய ஸ்மார்ட்போன்கள்

எச்டிசி நிறுவனம் தற்போது இந்திய மொபைல் சந்தையில் 4 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இவற்றில் எச்டிசி 8எக்ஸ் மற்றும் 8எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கின்றன. அடுத்ததாக எச்டிசி எக்ஸ்+ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இறுதியாக எச்டிசி டிசையர் எஸ்வி டூவல் சிம் வசதியுடன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருகிறது.

இந்த 4 ஸ்மார்ட்போன்களும் இந்த நவம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே எச்டிசி தனது ரசிகர்களைக் குஷிப்படுத்த ஷோலிக்.காம் என்ற ஆன்லைன் கடை மூலம் எச்டி 8எக்ஸ் மற்றும் எச்டிசி டிசையர் எஸ்வி ஆகிய போன்களை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. 8எக்ஸ் ரூ.34,149க்கும் டிசையர் எஸ்வி ரூ.27,799க்கும் விற்கப்படுகின்றன.

மேலும் இந்த போன்களை வாங்க விரும்பி விண்ணப்பித்த 4 நாள்களுக்கு விண்ணப்பித்தவர்களின் இல்லங்களைத் தேடி வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன.

குறிப்பாக விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் எச்டிசி 8எக்ஸ் போன் 4.3 இன்ச் அளவில் ஒரு சூப்பர் எல்சிடி 2 டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது.

அதோடு இந்த போனில் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்போர் ப்ராசஸர், 8எம்பி பின்பக்க கேமரா, 2.1எம்பி முகப்புக் கேமரா, 16ஜிபி சேமிப்பு, 512எம்பி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், பீட்ஸ் ஆடியோ, என்எப்சி, ப்ளூடூத் மற்றும் வைபை ஆகிய வசதிகளை பார்க்கலாம்.

எச்டிசி டிசையர் எஸ்வி ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப வசதிகளை எடுத்துக் கொண்டால் இதுவும் குறைவில்லாமல் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 4.3 இன்ச் அளவில் ஒரு சூப்பர் எல்சிடி 2 டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும்.

மேலும் இந்த போனில் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 சிப்செட், டூவல் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் க்ரைட் ப்ராசஸர் மற்றும் 768எம்பி ரேம் ஆகியவை இருப்பதால் இந்த போன் மிகவும் வேகமாக இயங்கும் என்று நம்பலாம். அதோடு எல்இடி ப்ளாஸ் மற்றும் பிஎஸ்ஐ சென்சாருடன் கூடிய 8எம்பி பின்பக்க கேமராவும் உள்ளது.

இந்த போனில் இருக்கும் 4ஜிபி சேமிப்பை 32ஜிபி அளவிற்கு எஸ்டி கார்டு மூலம் விரிவு செய்ய முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத், வைபை, பீட்ஸ் ஆடியோ மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகிய வசதிகளும் உள்ளன.

ஆகவே அமர்க்களமாக வரும் இந்த இரண்டு போன்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ரசிகர்களுக்கு திண்டாட்டமாகவே இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X