அடுத்த வாரம் தனது புதிய விண்டோஸ் 8 போன்களைக் களமிறக்கும் எச்டிசி

எச்டிசி நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில், விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் தனது புதிய மின்னணு சாதனங்களை அடுத்த வாரம் இந்தியாவில் களமிறக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
விண்டோஸ் இயங்கு தளத்தில் வரும் 8எக்ஸ் மற்றும் 8எஸ் என்ற போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதமே எச்டிசி தெரிவித்திருந்தது. தற்போது அந்த புதிய போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் களமிறக்க இருப்பதாக எச்டிசி உறுதி செய்திருக்கிறது.
8எக்ஸ் மற்றும் 8எஸ் ஆகிய இரண்டு போன்களும் டூவல் கோர் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸரில் வருகிறது. இந்த இரண்டு போன்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எச்டிசி விண்டோஸ் போன் 8எக்ஸை எடுத்துக் கொண்டால் இந்த போன் 4.3 இன்ச் அளவில் எச்டி சூப்பர் எல்சிடி 2 டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸர் இருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்பதில் ஐயமில்லை.
அதோடு இந்த போனில் எல்இடி மற்றும் 1080பி எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட ஒரு 8எம்பி ஆட்டோ போக்கஸ் கேமரா, ஒரு 2.1எம்பி முகப்புக் கேமரா, 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆகிய வசதிகளையும் காணலாம்.
அதே நேரத்தில் 8எஸ் போன் 4 இன்ச் அளவில் ஒரு சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ராசஸரையும் இந்த போன் கொண்டிருக்கிறது.
இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் 720பி வீடியோ பதிவு வசதிகளைக் கொண்ட ஒரு 5எம்பி ஆட்டோ போக்கஸ் கேமராவும் உள்ளது. மேலும் இந்த போனில் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி மெமரி உள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவு செய்ய முடியும். இந்த இரண்டு போன்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications