எச்டிசி 8எஸ் மற்றும் நோக்கியா லுமியா-820 ஸ்மார்ட்போன்கள்!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்கும். ஸ்கைட்ரைவ், விஷுவல் வாய்ஸ் மெயில் போன்ற நவீன தொழில் நுட்ப வசதிகளை இந்த விண்டோஸ்-8 இயங்குதளத்தின் மூலம் பெறலாம்.
8எஸ் ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் கொண்டு செயல்படும். லுமியா-820 ஸ்மார்ட்போனும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் வசதியினை வழங்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் டியூவல் கேமரா வசதியினை வழங்கும். லுமியா-820 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும். லுமியா-820 ஸ்மார்ட்போனின் கேமராக்களில் ப்யூர்வியா தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்த முடியும். 8எஸ் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் இன்டர்னல் மெமரி வசதி பற்றியும் பார்க்கலாம். 8எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், லுமியா-820 ஜிபி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதோடு நோக்கியாவின் ஸ்மார்ட்போனில் 8 ஜிபி மற்றும் 4 ஜிபி மைக்ரோசாஃப்ட் ஸ்கைட்ரைவ் ஸ்டோரேஜ் வசதியினை பெறலாம். ஆனால் எச்டிசி ஸ்மார்ட்போனில் இந்த ஃப்ரீ ஸ்டோரேஜ் வசதி இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 32 ஜிபி வரை மெமரி வசதியினை பயன்படுத்த இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் ஒத்துழைக்கிறது. லுமியா-820 ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்பத்தினையும் எளிதாக பெறலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்டர்நெட் வசதியினை பெற வைபை நெட்வொர்க்கை அளிக்கும். 8-எஸ் ஸ்மார்ட்போனில் 1,700 எம்ஏஎச் பேட்டரியும், லுமியா-820 பேட்டரியில் 1,650 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். 300 ஸ்டான்-பை டைமும், 14 மணி நேரம் டாக் டைமும் கிடைக்கும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications