ஆப்புனா இப்படி வைக்கணும்.. அவசரப்பட்டு OnePlus 11 வாங்கிடாதீங்க.. பிப்.26 க்கு பின் ரொம்ப வருத்தப்படுவீங்க!
அவசரப்பட்டு ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க, இல்லையென்றால் ரொம்ப வருத்தப்படுவீர்கள் என்று கூறும் அளவிற்கு.. வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ஒரு தரமான ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் 11 க்கு ஆப்பு வைக்க போகும் சியோமி போன்
நாம் இங்கே பேசுவது சீன மொபைல் நிறுவனமான சியோமியின் (Xiaomi) லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் ஒன்றான சியோமி 13 ப்ரோவை (Xiaomi 13 Pro) பற்றித்தான்.

சியோமி 13 சீரிஸின் கீழ் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என 2 மாடல்கள் இருந்தாலும் கூட, வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ப்ரோ மாடல் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏனென்றால் ஒன்பிளஸ் 11-ஐ "காலி செய்ய வேண்டும்" என்கிற முக்கிய நோக்கத்தின் தான், இந்த சியோமி ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கே வருகிறது. ஒன்பிளஸ் 11 5ஜி உடன் சேர்த்து ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனும் "அடி வாங்கினால்" இந்த சீன நிறுவனத்திற்கு இரண்டு லட்டு தின்றது போல இருக்கும்!
ஒன்பிளஸ் 11-ஐ வீழ்த்தும் அளவிற்கு சியோமி 13 ப்ரோவில் அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் என்று சொல்லி விளம்பரம் செய்யப்படுகிறதோ, சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனானது அதற்கு ஈடான அம்சங்களை பேக் செய்கிறது.
வேற லெவலில் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பெரிய குவாட் எச்டி+ டிஸ்பிளே, சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!
சியோமி 13 ப்ரோ விரிவான அம்சங்கள்
டிஸ்பிளே: இது குவாட் எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.73-இன்ச் LTPO இ6 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் இதன் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
ப்ராசஸர்: சியோமி 13 ப்ரோவில் குவால்காமின் லேட்டஸ்ட் ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறும். இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும்.
ஓஎஸ்: சியோமியின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த எம்ஐயுஐ 4 உடன் அனுப்ப்படும்
கேமரா: சியோமி 13 ப்ரோவானது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான சிறந்த கேமரா போன்களில் ஒன்றாக இருக்கும். ஏனென்றால், இது 1-இன்ச் சென்சார் சைஸ் மற்றும் ஓஐஎஸ் (OIS) உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்989 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா இருக்கும்.
பேட்டரி: இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4820mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் கூட ஆதரிக்கிறது.
சியோமி 13 ப்ரோ இந்திய விலை மற்றும் விற்பனை
இது சீனாவில் (இந்திய மதிப்பின்படி தோராயமாக) ரூ.60,250 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக எப்படி பார்த்தாலும் இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ,70,000 க்குள் தான் இருக்கும். அப்போது தான் ஒன்பிளஸ் 11-க்கு கடுமையான போட்டியை வழங்க முடியும்.
சியோமி 13 ப்ரோவின் இந்திய அறிமுகத்திற்கு பிறகு, அது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications