HTC நிறுவனத்தின் U11 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்து போட்டியை சமாளித்து வரும் நிலையில் தைவான் நிறுவனத்தின் HTC நிறுவனமும் தனது புதிய மாடலான U11 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. மே 16ஆம் தேதி வெளியாகும் இந்த போன், வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HTC நிறுவனத்தின் U11 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

வெளியாவதற்கு முன்பே U11 மாடல் குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் செய்திகள் வெளியாகியிருந்தாலும் தற்போது இந்த மாடலின் தரம், டெக்னாலஜி குறித்து பார்ப்போம்

HTC - U11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

HTC - U11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

இந்த போன் குறித்து இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி இந்த போன் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே, ஸ்னாப்டிரகன் 835 சிப்செட், 4GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

மெமரியை அதிகரித்து கொள்ளும் வசதி இருப்பது குறித்து தகவல்கள் இல்லை. மேலும் இந்த போனில் 12 MP பின்கேமிரா, மற்றும் 16MP செல்பி கேமிராவும் உள்ளது.

இன்னொரு வகையும் உண்டு:

இன்னொரு வகையும் உண்டு:

இந்த போன் 4GB ரேம் மட்டுமின்றி, 6GB ரேம் மற்றும் 128 GB இன்னர் மெமரியை கொண்ட இன்னொரு வகையும் உள்ளது. இதில் 3000 mAh பேட்டரி தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி, மோட்டோரோலாவிடம் இல்லாத 2 விடயங்கள் நோக்கியாவிடம் உள்ளது.!சியோமி, மோட்டோரோலாவிடம் இல்லாத 2 விடயங்கள் நோக்கியாவிடம் உள்ளது.!

வாட்டர் ரெசிஸ்டெண்ட் உண்டா?

வாட்டர் ரெசிஸ்டெண்ட் உண்டா?

தற்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் இருக்கும்போது, இந்த HTC - U11 ஸ்மார்ட்போனில் இல்லாமல் இருக்குமா? இதில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் உண்டு. மேலும் இந்த போனி HTC பூம்சோண்ட், ஹை ரெசிஸ்டெண்ட் ஆடியோ, HTC யுசோனிக் போன்ற சவுண்ட் டிபார்ட்மெண்ட்களும், 3D ஆடியோ ரெக்கார்டிங்கும் உண்டு

எட்ஜ் எப்படி இருக்கும் தெரியுமா?

எட்ஜ் எப்படி இருக்கும் தெரியுமா?

வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த HTC - U11 ஸ்மார்ட்போனில் 'எட்ஜ் சென்ஸ்' உள்ளது. இது வாடிக்கையாளர்களை கண்டிப்பாக திருப்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

360 வீடியோ ரிக்கார்டிங்:

360 வீடியோ ரிக்கார்டிங்:

HTC - U11 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில் இதில் 360 டிகிரி ரியல் லைஃப் ரிக்கார்டிங் வசதி உண்டு

Source 1, 2

Best Mobiles in India

Read more about:
English summary
In an attempt to change its fate of failure, Taiwan-based handset HTC is planning to launch its next flagship smartphone under the name tag of U 11 on coming Tuesday, which is on May 16.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X