மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி?

பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் மோட்டோ ஆக்ஷன்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

|

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.15,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல்-லென்ஸ் கேமரா, பெரிய எல்.சி.டி. டிஸ்ப்ளே நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாக் ஆன்ட்ராய்டு கொண்டு இயங்கும் மோட்டோ ஒன் பவர் மாடலில் பயனர்களுக்கு பிரீமியம் அனுபவம் கிடைக்கும்.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோஆக்ஷன்ஸ்பயன்படுத்துவதுஎப்படி?

பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் மோட்டோ ஆக்ஷன்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கீழே வரும் பட்டியலில் மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி?

மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி?

மோட்டோ ஆக்ஷன்ஸ்-ஐ இயக்குவதும், பயன்படுத்துவதும் மிகவும் எளிமையான விஷயமாகும். மோட்டோ ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை இயக்கி பயன்படுத்த உங்களது மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் மெனு சென்று எம் (M) ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இனி தனிப்பட்ட அனுபவத்தை வழங்க உங்களது கான்ட்க்ட்ஸ்-ஐ இயக்கும் அனுமதி கோரப்படும். இதைத் தொடர்ந்ததும், உங்களுக்கு மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ டிஸ்ப்ளே என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். இந்த திரையில் இருந்து மோட்டோ ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து ஜெஸ்ட்யூர் வசதியை ஒவ்வொரு அம்சத்திற்கும் எனேபிள் செய்யலாம்.

மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சங்கள்:

மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சங்கள்:

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சத்தை மோட்டோ ஜி3 ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்தது. அதன்பின் வெளியிடப்பட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மோட்டோ ஆக்ஷன்ஸ் கொண்டு பல்வேறு இயக்கங்களை மிக எளிய ஜெஸ்ட்யூர்களின் உதவியோடு செய்து முடிக்க முடியும். இதனால் சில இயக்கங்களை அதற்கான செயலி அல்லது அம்சத்தை திறக்காமல் நேரடியாக பயன்படுத்த முடியும்.

எல்.இ.டி. டார்ச் இயக்க டபுள் கராத்தே சாப்:

எல்.இ.டி. டார்ச் இயக்க டபுள் கராத்தே சாப்:

பெயருக்கு ஏற்றார்போல் டபுள் கராத்தே சாப் மூலம் மோட்டோ ஒன் பவர் டார்ச் லைட் இயக்கலாம். இந்த அம்சம் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மோட்டோரோலா சாதனத்தில் வழங்கப்பட்டிருக்கும் என்பதால், இதை அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த அம்சத்திற்கு ஸ்மார்ட்போனினை இருமுறை அசைக்க வேண்டும். இருள் நிறைந்த சூழல்களில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ட்விஸ்ட் செய்தால் க்விக் கேப்ச்சர்:

ட்விஸ்ட் செய்தால் க்விக் கேப்ச்சர்:

இந்த மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சத்தில் ஸ்மார்ட்போனின் கேமரா செயலியை மிக எளிய ஜெஸ்ட்யூர் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே இயக்க முடியும். இதற்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் மணிக்கட்டு பகுதியை இருமுறை ட்விஸ்ட் செய்ய வேண்டும். அதாவது பைக் அக்செலரேட் செய்வதை போன்று திறுக வேண்டும். திடீரென ஏதேனும் தருணத்தை புகைப்படம் எடுக்க வேண்டிய சூழலில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

மோட்டோ டிஸ்ப்ளே:

மோட்டோ டிஸ்ப்ளே:

மோட்டோ ஒன் பவர் வழங்கும் கடைசி மோட்டோ ஆக்ஷன் ஜெஸ்ட்யூர் இது. இந்த ஆக்ஷன் கொண்டு சாதனத்தின் நோட்டிஃபிகேஷன் ஃபேட் மற்றும் ஃபேட் அவுட் முறையில் காண்பிக்கும். இந்த அம்சம் பேட்டரியை சேமிப்பதோடு, செயலிகளின் நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்யும். இத்துடன் சில செயலிகளுக்கு க்விக் ரிப்ளை வசதியையும் செட் செய்து கொள்ள முடியும்.

மோட்டோ ஆக்ஷன் எவ்வாறு பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது?

தினசரி பயன்பாடுகளின் போது மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் பலமுறை நேரத்தை சேமிக்கச் செய்யும் அம்சங்களை கொண்டுள்ளது. ஒவ்வொருத்தர் பயன்பாட்டிற்கு ஏற்ப அவரவர் அதிகம் பயன்படுத்தும் இயக்கங்களை ஜெஸ்ட்யூர் செட் செய்து கொண்டால், மிகவும் எளிமையாக அவற்றை செயல்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
How to use Moto actions in Motorola One Power budget smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X