Home
Mobile

18 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம்.. 'லைவ்' இங்கே பார்க்கலாம்..

ஆசஸ் நிறுவனம் இன்று இந்தியா மற்றும் பிற சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தைகளில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த சில வாரங்களில் மிகவும் பிரமிப்பாகப் பேசப்பட்டு வந்தது, காரணம் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 18 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்ஸ் மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இடம்பெறுகிறது.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு இந்தியாவில் மாலை 4:15 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வை ஆசஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடக சேனல்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக நேரலை செய்கிறது. ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் அறிமுக வெளியீட்டு நிகழ்வை நேரலை காண, கீழேயுள்ள வீடியோ இணைப்பை நீங்கள் கிளிக் செய்யலாம்.

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை நேரலை காண இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிப் பார்க்கையில், நிறுவனத்தின் அறிவிப்புப் படி புதிய ஆசஸ் ROG போன் 5 சாதனம் பிளிப்கார்ட் தளத்தின் வழி பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. காரணம், பிளிபாகர்ட் ஈ-காமர்ஸ் வலைத்தளத்தில் ஆசஸ் ROG போன் 5 சாதனத்தின் வரவிருக்கும் அறிமுகத்திற்கான மைக்ரோசைட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

இத்துடன் ஆசஸ் ROG போன் 5 சாதனத்திற்குப் பொருந்தக்கூடிய ஏரோஆக்டிவ் கூலர் 5 சாதனத்தையும் நிறுவனம் தனித்தனியாக விற்பனை செய்யும் என்று ஆசஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களுடன் வெளியாகும் இந்த புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனை நாம் என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்பதனை சமீபத்திய டிப்ஸ்டர் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் கொண்ட அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை சுமார் ரூ. 50,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலின் விலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. எது எப்படியாக இருந்தாலும் அனைத்து மாடல்களின் விலைப் பட்டியல் மாலை வெளியாகிவிடும் என்பதனால் நாம் காத்திருக்கலாம்.

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன், 6.78' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல்கள் தீர்மானம் உடைய முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 20: 9 என்ற விகித டிஸ்பிளே விகிதம் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் கொண்ட 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், மற்ற ரேம் வகைகளும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் ஹை-வேரியண்ட் மாடலாக 18 ஜிபி ரேம் கொண்ட ஆசஸ் ROG போன் 5 சாதனம் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உயர் திறன் கொண்ட கேமிங் அனுபவத்திற்காக ஆசஸ் நிறுவனம் இம்முறை 18 ஜிபி ரேம் கொண்ட மாடலை ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் ரேம் பற்றிய தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தில் என்ன அளவு இன்-பில்ட் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்பது பற்றிய சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

இந்த புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன் சாதனம் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி என்பது இதில் 2x 3000mAh பேட்டரிகள் மூலம் தடையில்லாத சக்தி வழங்கப்படுகிறது. மேலும் 3C சான்றிதழ் முன்பே வெளியிட்டது போல் இதில் 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆசஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன் சாதனம் இன்-பில்ட் கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.

18 ஜிபி ரேம், 6000mah பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம் ..

புதிய ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கேமராவாக 16 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கேமராவாக 8 மெகாபிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி அனுபவத்திற்காக முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி மிரட்டலான பல சிறப்பம்சங்களுடன் இன்று வெளியாகும் இந்த புதிய ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வை நேரலை காண மேலே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல் லிங்கை கிளிக் செய்யுங்கள். 18 ஜிபி ரேம் உடன் வெளியாகும் இந்த புதிய மிரட்டலான கேமிங் ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்களை, ஆசஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்குப் பின்னர் நாங்கள் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம். அதுவரை எங்களின் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
How to Watch Live Stream Of Asus ROG Phone 5 Launching Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X