இன்று அறிமுகமாகும் Micromax 'In' ஸ்மார்ட்போன்கள்.. லைவ் பார்ப்பது எப்படி?

|

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு இன்று ஒரு பெரிய நாள், ஏனெனில் நிறுவனம் இன்று தனது புதிய 'இன்' (In) ஸ்மார்ட்போன் தொடருடன் இந்தியாவில் மீண்டும் தனது பயணத்தைத் துவங்க உள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்கள் மற்றும் யூடியூப் வழியாக நண்பகல் 12 மணிக்கு நிகழ்ச்சியின் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மைக்ரோமேக்ஸ் 'In' ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் 'In' ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தைப் பற்றி சில காலமாக டீஸ் செய்து வருகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் ரூ. 7,000 முதல் ரூ. 15,000 வரையில் ஒரு பிரிவைக் கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இது சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ரியல்மி, சியோமி, ஒப்போ மற்றும் சாம்சங் போன்றவற்றின் மேல் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று கருதப்படுகிறது.

மீடியா டெக் பிராசஸர்

மீடியா டெக் பிராசஸர்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பிராண்டான In ஸ்மார்ட்போன்கள் மீடியா டெக் பிராசஸர் உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் தயாரிப்பு என்பதை நிறுவனம் அழுத்தமாகக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெயர்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், மைக்ரோமேக்ஸ் எத்தனை போன்களை அறிமுகம் செய்யுமென்று கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தலையுடன் ஒட்டி பிறந்த அரிய வகை பாம்பு.. அதன் இரண்டு தலைக்கு இதுதான் காரணமா?இரண்டு தலையுடன் ஒட்டி பிறந்த அரிய வகை பாம்பு.. அதன் இரண்டு தலைக்கு இதுதான் காரணமா?

மைக்ரோமேக்ஸ் இன் 1 சீரிஸ்

மைக்ரோமேக்ஸ் இன் 1 சீரிஸ்

மைக்ரோமேக்ஸ் இன் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1A என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்று லீக் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் முறையே மீடியாடெக் ஹீலியோ ஜி 80 மற்றும் ஹீலியோ ஜி 35 பிராசஸர் மூலம் இயங்கக்கூடியதாக இருக்கும், இவை 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு வகைகளுடன் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் விருப்பங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

லைவ் பார்க்கலாம்

குறிப்பாக, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல்கள் வேறுபட்ட கேமரா சென்சார்களைக் கொண்டு வரக்கூடும். 2 ஜிபி மாடலில் இரட்டை-பின்புற கேமராக்கள் இடம்பெறலாம், இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் இடம்பெறும், 3 ஜிபி மாடலில் மூன்று பின்புற கேமராக்கள் 13 மெகாபிக்சல் லென்ஸ், 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2- மெகாபிக்சல் லென்ஸ் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்

இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவரும். பாதுகாப்புக்காகக் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் சிஸ்டத்தை நிறுவனம் வழங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் என்ன விலையில் என்ன நிறங்களில் வெளியாகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயம் இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போலக் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How To Watch Live Stream Micromax In Smartphone Series Launch Event In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X