பழைய ஐபோனை என்ன செய்யலாம்!

By Super
|

பழைய ஐபோனை என்ன செய்யலாம்!
ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இன்று மனம் குளிர புதிய ஐபோனின் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் படித்து கொண்டிருப்பார்கள். முந்தைய ஐபோன் மாடலை வைத்திருப்பவர்களுக்கு, புதிய ஐபோனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன், கையில் இருக்கும் ஸ்மார்போனை எப்படி விற்பனை செய்வது என்ற கவலை வர ஆரம்பித்துவிடும்.

பழைய ஐபோனை எப்படி விற்பது என்று யோசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இங்கே சில வழிகள் இருக்கிறது. ஆன்லைன் வலைத்தளங்கள் மூலம் பிராண்டடு மின்னணு சாதன பொருட்களை எளிதாக விற்கலாம். உதாரணத்திற்கு கேஸில், பைமைட்ரானிக்ஸ், நெக்ஸ்ட்வொர்த் போன்ற வலைத்தளத்தை திறக்க வேண்டும். இதில் ஐபோன், செல்போன், ஐபேட், ஐபோட், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், மற்ற ஆப்பிள் எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று நிறைய ஆப்ஷன்கள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் உங்கள் கையிலிருக்கும் ஐபோன் மாடலை வலைத்தளத்தில் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு எந்த டெலிகம்யூனிக்கேஷன் நிறுவனம் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர் எத்தனை ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதையும் குறிப்பட்டு க்ளிக் செய்தால், அடுத்த பக்கம் திறக்கப்படும். அதில் ப்ரோக்கன், குட், ஃப்லாலெஸ் என்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது சிலர் உடைந்த ஸ்மார்ட்போனை விற்க வேண்டும் என்ற நினைப்பார்கள். அப்படி என்றால் ப்ரோக்கன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இன்னும் சிலர் சிறந்த கன்டிஷனில் இருக்கும் ஸ்மார்ட்போனை விற்க நினைப்பார்கள். அப்படி என்றால் குட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இன்னும் சிலர் பல வருடங்களாக பயன்படுத்தியும், பார்ப்பதற்கு புதிது போலவே ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பார்கள். அப்படி என்றால் ஃப்லாலெஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்படி க்ளிக் செய்தால் அதற்கேற்ற விலையும் அங்கு காட்டப்படும். இதன் பிறகு பொருட்களை விற்க வேண்டும் என்றால் இதில் தனியாக ஒரு அக்கவுன்ட் உருவாக்க வேண்டும். இப்படி பயன்படுத்திய ஐபோன் ஸ்மார்ட்போன்களை விற்க இது ஒரு சிறந்த வழி என்று கூறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X