தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?

Posted By: Karthikeyan
தண்ணீருக்குள் முழுமையாக நனைந்துவிட்ட மொபைலை எவ்வாறு பராமரிப்பது?

மொபைல்கள் சிறியதாக இருப்பதால் அதை எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அப்படி எடுத்துச் செல்லும் போது அந்த மொபைல் தவறுதலாக மழையில் நனையவோ, கழிவறைக்குள் விழவோ, அல்லது வாஷிங் மெஷினில் விழவோ வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பின்பற்றினால் போது மொபைல்களைக் காப்பாற்ற முடியும்.

1. முதலில் தண்ணீருக்குள் விழுந்த போனை உடனடியாக வெளியில் எடுக்க வேண்டும். நீண்ட நேரம் அது தண்ணீருக்குள் இருந்தாலு மொபைலுக்கு ஆபத்தாகிவிடும்.

2. வெளியில் எடுத்ததும் அது செயல்படுகிறதா இல்லையா என்று அவசரப்பட்டு கீகளை வேகமாக அழுத்தக்கூடாது.

3. வெளியில் எடுத்தவுடன் உடனடியாக மொபைலில் உள்ள பேட்டரியை வெளியில் எடுக்க வேண்டும். அதன் மூலம் மொபைலுக்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்த முடியும்.

4. அடுத்ததாக மொபைலில் உள்ள சிம்கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளையும் வெளியில் எடுக்க வேண்டும்.

5. பின் மொபைல் மற்றும் சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகளை கவனமாக டவல் வைத்து துடைக்க வேண்டும்.

6. அவ்வாறு துடைத்தாலும் மொபைலில் சற்று ஈரப்பதம் இருக்கும். எனவே உலர்ந்த நெல் அல்லது அரிசி இருக்கும் பாத்திரத்திற்கும் மொபைலை வைக்க வேண்டும். ஏனெனில் இந்த உலர்ந்த அரிசி அல்லது நெல் மிக விரைவாக ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அல்லது வேறு நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தலாம். அதாவது ஹேர் ட்ரையரைக்கூட பயன்படுத்தலாம்.

9. இப்போது மொபைலில் உள்ள ஈரப்பதம் முழுமையாக காய்ந்திருக்கும் என்று நினைத்தால் மொபைலில் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றை பொருத்தி இயக்க ஆரம்பிக்கலாம். கண்டிப்பாக இப்போது மொபைல் வேலை செய்யும்.

மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பதன் மூலம் மொபைல் இயங்க ஆரம்பித்தால் வெற்றிதான். அப்படியும் மொபைல் இயங்கவில்லையானால் அந்த மொபைல் தண்ணீரினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். எனவே மொபைல் சர்வீஸ் செய்பவரிடம் காட்டுவது நல்லது. ஏனெனில் அவர்கள்தான் மொபைலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை மிக எளிதாக கண்டுபிடிப்பார்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot