பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தவறவிட்டாலும் இன்னும் கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வசதிகளை இன்னும் கூட அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து சேவைகளிலும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இப்போது பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் -ஐ ஆன்லைனில் செலுத்துவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

எஸ்என்எல் லேண்ட்லைன் பில் செலுத்த

குறிப்பாக பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் செலுத்த அதிகாரப்பூர்வ வலைத்தளம், மொபைல் பயன்பாடு மற்றும் மூன்றாம் தரப்பு தளங்கள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் உள்ளன. நாம் இப்போது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் -ஐ செலுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!

 வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://portal.bsnl.in/myportal/ என்ற தளத்தில்

உள்நுழையவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து அந்த தளத்தில் SIGN IN என்ற விருப்பத்தை தேர்வு செய்து Username மற்றும் Password கொடுத்து உள்நுழைய வேண்டும். ஒருவேளை Username மற்றும் Password இல்லை என்றால் sign up என்ற விருப்பமும் அதில் இருக்கும், அதை கிளிக் செய்து மொபைல் நம்பர், பெயர், இமெயில் ஐடி போன்றவற்றை கொடுத்து Username மற்றும் Password-ஐ பெறமுடியும்.

வழிமுறை-3

வழிமுறை-3

SIGN IN செய்து உள்நுழைந்ததும் dashboard விருப்பத்திற்கு கீழே manage account என்ற விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்து, லேண்ட்லைன்> போன் நம்பர்>அக்கவுண்ட் நம்பர்> பெயர் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.

 வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து பணம் செலுத்த சில வசதிகள் இருக்கும், அதை தேர்வு செய்து பில் தொகையைச் சரிபார்த்து பணம் செலுத்துங்கள். குறிப்பாக பணம் செலுத்த உங்கள் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Pay BSNL Landline Bill Online in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X