Home
Mobile

பரபரப்பை கிளப்பும் Flipkart குடியரசு தின ஆபர்.. லேட்டஸ்ட் iPhone மாடல் மீது அடிமட்ட ஆபர்!

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஆப்பிள் ஐபோன் 17 மாடல் மீது இப்படி ஒரு தள்ளுபடி-ஆ என்று ஆச்சரியப்படுத்தும் வண்ணம், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் ஆனது ஐபோன் 17 மீதான அதன் 2026 குடியரசு தின சிறப்பு விற்பனை சலுகையை அறிவித்துள்ளது.

ஐபோன் 17 மீது கிடைக்கும் ரூ.8,000 தள்ளுபடி - எவ்வாறு பெறுவது? ஆப்பிள் ஐபோன் 17 மாடலின் 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.82,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இது தான் ஐபோன் 17 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆகும். 2026 குடியரசு தின விற்பனையின் (ஜன.17 தொடங்குகிறது) கீழ், ஐபோன் 17-ஐ வாங்குபவர்கள் முதலில் ரூ. 4,000 உடனடி கேஷ்பேக்கை பெறலாம். இது ஐபோன் 17 மாடலின் விலையை ரூ. 74,900 ஆகக் குறைக்கிறது.

Flipkart குடியரசு தின ஆபர்.. லேட்டஸ்ட் iPhone மாடல் மீது அடிமட்ட ஆபர்!

இதோடு பிளாட் தள்ளுபடியுடன், வாடிக்கையாளர்கள் தகுதியான வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ. 4,000 தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை பணம் செலுத்தும் நேரத்தில் பொருந்தும் மற்றும் ஐபோன் 17 மாடலின் விலையை மேலும் குறைக்கும். அதாவது மொத்தம் ரூ.8000 தள்ளுபடி கிடைக்கும்.

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது

இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to get Rs 8000 discount on iPhone 17 in Flipkart Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X