ரூ.89,999 க்கு அறிமுகமான Samsung போனை ரூ.29,449 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
அமேசான் இந்தியா வலைத்தளமானது ஆபர் மழையிலும், ஆர்டர் மழையிலும் நனைகிறது என்றே கூறலாம். இதற்கு காரணம் மே 2 முதல் தொடங்கி வருகிற மே 9 ஆம் தேதி வரை நடக்க உள்ள அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 தான்!
ஒரு புதிய ஸ்மார்ட்போனை மலிவான விலைக்கு வாங்க இதைவிட ஒரு சூப்பர் சான்ஸ் அடுத்த தீபாவளிக்கு தான் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால்.. ரூ.89,999 க்கு அறிமுகமாகி ரூ.29,449 க்கு கிடைக்கும் ஒரு மாடலை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்!

அதென்ன மாடல்? அது சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G) மாடல் தான். சாம்சங்கின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் சம்மர் விற்பனையின் (Amazon Great Summer Sale 2024) ஒரு பகுதியாக.. நம்ப முடியாத விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர்களுக்கு பிறகான விலை என்ன? இதோ விவரங்கள்:
இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போன் மீது மொத்தம் 3 ஆஃபர்கள் அணுக கிடைக்கிறது. முதல் ஆஃபர், அமேசானின் டைரக்ட் டிஸ்கவுண்ட் (Direct Discount). இதன்கீழ் ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக 27% தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், க்ரீன் கலர் ஆப்ஷனின் விலை ரூ.89,999-லிருந்து ரூ.69,999 ஆக குறையும்.

இரண்டாவது ஆஃபர், எச்டிஎஃப்சி வங்கியின் கார்டு டிஸ்கவுண்ட் (HDFC Bank Card Discount). இதன் கீழ் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.9,000 நேரடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.69,999-லிருந்து ரூ.60,999 ஆக குறைக்க முடியும்.
மூன்றாவது ஆஃபர், அமேசானின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer). இதன் கீழ் "நல்ல நிலையில்" உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.31,550 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதையும், மேற்கண்ட 2 ஆஃபர்களையும் சேர்த்தால்.. சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.29,449 க்கு கொண்டுவர முடியும்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.62,999 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆனது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கும், ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கும் வாங்க கிடைக்கும்.
ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள்: ஐக்யூ 12 (iQoo 12) ஆனது ரூ.52,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கும், ஐக்யூ 11 (iQoo 11) ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கும், ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQoo Neo 9 Pro) ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கும் வாங்க கிடைக்கிறது
மேலும் ஐக்யூ இஸட்9 (iQoo Z9) ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும், ஐக்யூ இஸட்7 ப்ரோ (iQoo Z7 Pro) ஆனது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கும், ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQoo Neo 7 Pro) ஆனது ரூ.32,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கும், ஐக்யூ இஸட்6 லைட் (iQoo Z6 Lite) ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








