Home
Mobile

Amazon Prime Day Sale-ன் உச்சக்கட்ட ஆபர்! ரூ.64999 OnePlus 12-ன் விலை இப்போ எவ்வளவு குறைஞ்சு இருக்கு தெரியுமா?

இன்றும், நாளையும்.. அதாவது ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மட்டுமே நடைபெறும் அமேசான் ப்ரைம் டே விற்பனையில் (Amazon Prime Day Sale) ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலானது.. முன் எப்போதும் கிடைக்காத அளவிலான மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12 மீது அப்படி என்ன ஆபர் கிடைக்கிறது? ஒன்பிளஸ் 12-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன? அமேசான் ப்ரைம் டே சேலில் வேறு என்னென்ன ஒன்பிளஸ் போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 12 மீதான ஆபர்: அமேசான் ப்ரைம் டே விற்பனையின் ஒரு பகுதியாக ஒன்பில்ஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.54,000 க்கும் குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் விலையான ரூ.64,999 க்கு பதிலாக ரூ.5000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

OnePlus 12 மீது Amazon Prime Day Sale-ன் உச்சகட்ட ஆபர்!

இதுதவிர்த்து அமேசான் பிரைம் மெம்பர்கள், எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,259 கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.54,000 க்குள் கொண்டு வரமுடியும். இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்பிளஸ் 12-ஐ ரூ.53,470 க்கு வாங்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இல்லை என்றாலும் கூட, எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது உங்களுக்கு 4,300 தள்ளுபடி கிடைக்கும். அதாவது ப்ரைம் மெம்பர்களுக்கு கிடைப்பதை விட ரூ.1959 குறைவாக கிடைக்கும். அமேசான் பிரைம் மெம்பர்ஷிபிபின் 1 மாத கால சந்தா ரூ.299 முதல் தொடங்குகிறது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

ஒன்பிளஸ் 12 முக்கிய அம்சங்கள்: ப்ரோஎக்ஸ்டிஆர் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு உடனான 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா செட்டப், 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடனான 5400mAh பேட்டரி.

ப்ரைம் டே சேலில் வேறு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் ஆபர்கள்: அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ஒன்பிளஸ் 12ஆர்-ன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இயர்பட்ஸ் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ.3,000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.

இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஸ்மார்ட்போன் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to buy Rs 64999 Worth OnePlus 12 For Rs 54470 in Amazon Prime Day Sale Best Mobile Phone Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X