வந்த வரை லாபம்.. போன மாசம் அறிமுகமான லேட்டஸ்ட் OnePlus போன் மீது ரூ.2000 திடீர் டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் ரசிகர்களின் கவனமும் அடுத்து வரும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலின் மீதே உள்ளது. எதிர்பார்த்ததை விட 1 மாதத்திற்கு முன்னதாகவே அறிமுகமாகும் என்கிற தகவலும், ஒன்பிளஸ் 13 மாடலானது ஒன்பிளஸ் 12 மாடலின் விலைக்கே அறிமுகமாகும் என்கிற கணிப்பும்.. ஒன்பிளஸ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது திடீரென ரூ.2000 ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ரூ.2000 ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்டை பெற்றுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் தான். இந்த டிஸ்கவுண்ட் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீது மட்டுமே கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைத்தளத்தின் படி, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

இதன் மூலம் ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை ரூ.27,999 க்கு வாங்க முடியும். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு உடனான தள்ளுபடியை தவிர்த்து, அமேசான் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1499 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அமேசான் வலைத்தளம் கூறுகிறது
மேலும் எச்டிஎப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள் மற்றும் வேறு சில கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் மீது சில நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள் உள்ளன.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு, இதுவரை வெளியான எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








