ரூ.36,999 போன் மீது ரூ.32,800 டிஸ்கவுண்ட்.. Flipkart-ல் நிக்காம விழும் ஆர்டர்.. லக் இருந்தா அள்ளிக்கோங்க!
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான நத்திங் போன் 2ஏ மாடலின் விற்பனை ஏற்கனவே தாறுமாறாக உள்ளதால்.. நத்திங் நிறுவனமானது மிகவும் புத்திசாலித்தனமாக "சற்றே பழைய" நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடலின் மீது வேற லெவல் சலுகைகளை அறிவித்து உள்ளது.
2024 அமேசான் கிரேட் சம்மர் விற்பனைக்கு (Amazon Great Summer Sale 2024) போட்டியாக நடக்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் (Flipkart Big Saving Days) தான் நத்திங் போன் 2 மாபெரும் தள்ளுபடிகளை பெறுகிறது. பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையில் நத்திங் போன் 2 மீது மொத்தம் 3 ஆஃபர்கள் அணுக கிடைக்கிறது.

முதல் ஆஃபர் - பிளிப்கார்ட்டின் டைரக்ட் டிஸ்கவுண்ட் (Direct Discount): இதன் கீழ் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக 26% தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் நத்திங் போன் 2-வின் விலை ரூ.49,999-லிருந்து ரூ.36,999 ஆக குறையும்.
இரண்டாவது ஆஃபர் - பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கார்டு டிஸ்கவுண்ட் (Flipkart AxisBank Card Discount): இதன் கீழ் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 5% நேரடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.1850 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நத்திங் போன் 2-வின் ரூ.35,149 ஆக குறைக்க முடியும்.

மூன்றாவது ஆஃபர் - பிளிப்கார்ட்டின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange Offer): இதன் கீழ் "நல்ல நிலையில்" உள்ள உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.32,800 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதையும், மேற்கண்ட 2 ஆஃபர்களையும் சரியாக பயன்படுத்தினால்.. நம்ப முடியாத விலைக்கு நத்திங் போன் 2 மாடலை வாங்கலாம்
அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது? ஐக்யூ 12 (iQoo 12) ஆனது ரூ.52,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கும், ஐக்யூ 11 (iQoo 11) ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கும், ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQoo Neo 9 Pro) ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

மேலும் ஐக்யூ இஸட்9 (iQoo Z9) ஆனது ரூ.19,999-க்கு பதிலாக ரூ.17,999 க்கும், ஐக்யூ இஸட்7 ப்ரோ (iQoo Z7 Pro) ஆனது ரூ.23,9990க்கு பதிலாக ரூ.20,999 க்கும், ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQoo Neo 7 Pro) ஆனது ரூ.32,999-க்கு பதிலாக ரூ.29,999 க்கும், ஐக்யூ இஸட்6 லைட் (iQoo Z6 Lite) ஆனது ரூ.12,999-க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆனது ரூ.64,999 க்கு பதிலாக ரூ.62,999 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆனது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கும், ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








