Home
Mobile

யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.. Nothing Phone 2-வின் சீக்ரெட் ப்ரைஸ்.. ஒரிஜினல் விலையை விட ரொம்ப கம்மி!

ஒரிஜினல் விலையை விட சற்றே குறைவான விலைக்கு நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஒரு எளிமையான வழி உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த புதிய நத்திங் போனின் விலையை உங்களால் ரூ.3000 குறைக்க முடியும்.

அதெப்படி என்பதை பற்றி பார்க்கும் முன்னர் நத்திங் போன் 2-வின் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், அவற்றின் இந்திய விலை நிர்ணயங்கள் மற்றும் விற்பனை விவரங்களை பற்றி விரைவாக பார்த்துவிடலாம். நத்திங் போன் 2 மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.. Nothing Phone 2-வின் சீக்ரெட் ப்ரைஸ்!

பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.44,999. அடுத்ததாக உள்ள 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.49,999. கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.54,999. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை (First Sale) வருகிற ஜூலை 21 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

வழக்கம்போல இந்த ஸ்மார்ட்போன், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். அங்கேதான் நாம் நத்திங் போன் 2-வை ரூ.3000 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க போகிறோம். இதற்காக நீங்கள் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நத்திங் போன் 2-வை ரூ.44,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கு வாங்க முடியும். முதல் விற்பனையிலேயே ரூ.3,000 ஆஃபர் உண்மையிலேயே ஒரு பெரிய தள்ளுபடியாகும். இதே சலுகை ரூ.49,999 க்கு அறிமுகமாகியுள்ள 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் மீதும் கிடைக்கும்; வங்கி சலுகையின் கீழ் இதை ரூ.46,999 க்கு வாங்கலாம்.

நத்திங் போன் 2-வை வாங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியான விஷயங்கள்: இது ஃபிளாக்ஷிப்-கிரேடு சிப்செட்டை கொண்டுள்ளது. அதாவது ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி-ஐ பயன்படுத்துகிறது, இது சமீப காலங்களில் வெளியான பெரும்பாலான விலையுயர்ந்த போன்களை இயக்குகிறது.

நத்திங் போன் 2 ஆனது நீண்ட கால மென்பொருள் ஆதரவை .வழங்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இபோது மூன்று வருட முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும். தற்போது இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ல் இயங்குகிறது. கூகிள் இன்னும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ வெளியிடவில்லை, அது வந்ததும் அப்டேட் கிடைக்கும்.

நத்திங் போன் 2-வில் 45W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், 15W க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரி உள்ளது. இருப்பினும், இந்நிறுவனம் ரீடெயில் பாக்ஸ் உடன் சார்ஜரை அனுப்பவில்லை. அதை தனியாக பணம் செலுத்தித்தான் நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.

இது மிகவும் தனித்துவமான செமி-டிரான்ஸ்பிரென்ட் பேக் பேனல் டிஸைனுடன் (Semi-transparent Back Panel Design) வருகிறது. முன்பக்கத்தில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. கடைசியாக இது அட்டகாசமான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது.

இது மென்மையான வீடியோவிற்கான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization - EIS) ஆகியவற்றிற்கான ஆதரவை கொண்டுள்ளது. கூடவே 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Buy Nothing Phone 2 at Rs 3000 Discounted Price in Flipkart First Sale on July 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X