எது.! தள்ளுபடியுடன் ரூ.10,000 விலைக்கு Nothing Phone (1) வாங்க முடியுமா? எப்படி?

|

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அற்புதமான செயல்திறனுடன் மிட் ரேஞ்ச் பிரிவில் இந்த ஆண்டு உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை கவர்ந்த பெருமை Nothing Phone (1) ஸ்மார்ட்போனாயே சாரும். இப்போது, இந்த போன் மீது மாபெரும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, எப்படி இந்த Nothing Phone (1) சாதனத்தைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்று பார்க்கலாமா?

நத்திங் ஃபோன் 1 மீது அதிரடி தள்ளுபடி.! திடீர் விலை குறைப்பு

நத்திங் ஃபோன் 1 மீது அதிரடி தள்ளுபடி.! திடீர் விலை குறைப்பு

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலும் நத்திங் ஃபோன் 1 மீது தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை உட்பட பல அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட பல சலுகைகளுடன், எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் இந்த நத்திங் போனை நீங்கள் வாங்கினால், நத்திங் ஃபோனின் (1) இன் விலையை ரூ.10000 வரை குறைக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.

ரூ. 10,000 விலைக்குள் Nothing Phone (1) வாங்கலாமா?

ரூ. 10,000 விலைக்குள் Nothing Phone (1) வாங்கலாமா?

ரூ. 10,000 விலைக்குள் புது நத்திங் ஃபோன் 1 கிடைக்கும் என்றால், வேண்டாமென்றா சொல்லப் போகிறோம். சரி, வாங்க இந்த ரேட்டில் எப்படி இந்த புதிய நத்திங் போனை வாங்குவது என்று பார்க்கலாம். நத்திங் போன் 1 இன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் தற்போது பிளிப்கார்ட்டில் 27 சதவீதம் தள்ளுபடியில் ரூ. 27499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

Nothing Phone (1) அசல் விலை மற்றும் சலுகை விலை.!

Nothing Phone (1) அசல் விலை மற்றும் சலுகை விலை.!

இதன் அசல் விலை ரூ. 37,999 ஆகும். தற்போதைய சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் மீது இப்போது கிடைக்கும் கூடுதல் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தினால், Nothing Phone (1) விலையை இன்னும் கணிசமாக குறைக்கலாம். இங்கு நாம் பேச போகும், சலுகையானது எக்ஸ்சேஞ் சலுகை பற்றியது.

எப்படி ரூ. 10,000 விலையில் Nothing Phone (1) வாங்குவது?

எப்படி ரூ. 10,000 விலையில் Nothing Phone (1) வாங்குவது?

ஆம், உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் சாதனத்தை எக்ஸ்சேஞ் செய்யும் போது பாதிக்குப் பாதி விலை குறைக்கப்படுகிறது. இதன் படி, உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் டிவைஸை எக்ஸ்சேஞ் செய்தால், உங்களுக்கு ரூ.17,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் புதிய Nothing Phone (1) விலையை ரூ. 9,999 என்ற விலை வரை குறைக்க வாய்ப்புள்ளது.

50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நீங்கள் எக்ஸ்சேஞ் செய்யும் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு ஒன்று அல்ல இரண்டு ஆண்டுகள் பழையது என்றால், உங்களுக்கு அதிகப்படியான எக்ஸ்சேஞ் வேல்யூ கிடைக்க வாய்ப்புள்ளது.

எக்ஸ்சேஞ் செய்து விலையைக் குறைப்பது ஏன் சிறப்பானது?

எக்ஸ்சேஞ் செய்து விலையைக் குறைப்பது ஏன் சிறப்பானது?

இந்த முழுமையான எக்ஸ்சேஞ் தள்ளுபடி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் பழைய சாதனத்தை எக்ஸ்சேஞ் செய்து விலையைக் குறைப்பது சிறப்பானது. இது புதிய டிவைஸின் விலையை இன்னும் அதிகமாக குறைக்க அனுமதிக்கிறது.

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகை

கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகை

உதாரணமாக உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் டிவைஸிற்கு ரூ. 4,000 முதல் ரூ. 8,000 வரை கிடைத்தால் கூட, Nothing Phone (1) சாதனத்தை இன்னும் குறைத்த விலையில் வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது தானே. அப்படியானால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு சிறப்பானது. இத்துடன் கூடுதல் சலுகையாக சில வங்கி சலுகையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
How to buy Nothing Phone 1 for just Rs.9999 with price drop from Flipkart discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X