ரூ.52,999 க்கு அறிமுகமான புத்தம் புது Google Pixel போனை ரூ.39,999 க்கு வாங்குவது எப்படி?
எதிர்பார்க்கப்பட்டபடியே மே 14 அன்று தொடங்கும்படி திட்டமிடப்பட்டுள்ள கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்விற்கு முன்பாகவே பிக்சல் 8ஏ அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதுவே உங்களுக்கு ஷாக் ஆக இருந்தால்.. இந்த போனின் மீது ரூ.13000 ஆபர் கிடைக்கிறது என்று கூறினால் என்ன செய்வீர்கள்?
ஜெமினி ஏஐ அசிஸ்டென்ட் மற்றும் கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் உட்பட பல கவனிக்கத்தக்க அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

அசல் விலை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ரூ.52,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அதன் முன்னோடியான பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை விட சற்று அதிகமான விலையாகும். நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.43,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம்,
ஆபர் விலை: ரூ.52,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை உங்களால் ரூ.39,999 க்கு வாங்க முடியும். இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மட்டுமே சாத்தியமாகும். பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போநாத்து ஏற்கனவே பிளிப்கார்ட் வழியாக ப்ரீ ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த போன் மே 14 அன்று காலை முதல் விற்பனைக்கு வரும்.
பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது அலோ, பே, அப்சிடியன் மற்றும் போர்செலைன் என்கிற நான்கு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். பேஸிக் 128ஜிபி மற்றும் 256 ஜிபி. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ. 52,999 ஆகும் மற்றும் 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.59,999 ஆகும்.
இருப்பினும், இந்த போனை நீங்கள் ப்ரீ ஆர்டர் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுடன் பல்வேறு அறிமுக சலுகைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம், இதன் மூலம் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் இறுதி விலையை குறைக்க முடியும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு உடனடி தள்ளுபடியாக ரூ.4,000 கிடைக்கும்
இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது ரூ.9,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் மூலம் கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் மீது மொத்தம் ரூ.13,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இப்படியாக இதன் இறுதி விலையை ரூ.39,999 ஆக குறைக்க முடியும். கூடுதலாக, ப்ரீ ஆர்டர் காலத்தில் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை வாங்கினால், பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ்-ஐ வெறும் ரூ.999 க்கும் வாங்கலாம்.
கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள்: இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40 சதவீதம் பிரகாசமாக இருப்பதாக கூகுள் கூறுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக பேட்டரியைப் பொறுத்தவரை பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது 4492mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








