Home
Mobile

இன்று முதல் SALE.. புது CMF Phone 2 Pro மாடலை ரூ.18,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்குவது எப்படி?

சிஎம்எப் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) மாடலின் முதல் விற்பனை இன்று (அதாவது மே 5 ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளது. சிஎம்எப் போன் 2 ப்ரோ அசல் விலை என்ன? என்னென்ன அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இது ஏனெனின் அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

சிஎம்எப் போன் 2 ப்ரோ அசல் விலை, அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள்: சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் - சிஎம்எப் போன் 2 ப்ரோவின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.18,999 மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோவின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.20,999.

CMF Phone 2 Pro மாடலை ரூ.16,999 க்கு வாங்குவது எப்படி?

சிஎம்எப் போன் 2 ப்ரோவின் மீது சில "முதல் நாள் விற்பனை சலுகைகளும்" அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart), )க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, இந்த போனின் விலையை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.19,999 க்கு வாங்க முடியும்.

கூடவே ரூ .1000 வங்கிதள்ளுபடியும் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் வலைத்தளம் அறிவித்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது சிஎம்எப் போன் 2 ப்ரோவை ரூ.,16,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்ய உள்ளது. இது பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+நானோ)
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2
- 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
- 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்

- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2160Hz PWM ப்ரெக்வன்சி
- 387ppi பிக்சல் டென்சிட்டி
- 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- HDR10+ ஆதரவு
- பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்

- ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
- 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- இரண்டு மைக்ரோஃபோன்கள்
- ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார்
- எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing's TrueLens Engine 3.0) தொழில்நுட்பம்

- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 5000mAh பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்

- 5ஜி ஆதரவு
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.3
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- - ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 164×7.8×78மிமீ
- எடையில் 185 கிராம்

Best Mobiles in India

English summary
How to Buy CMF Phone 2 Pro For Rs 16999 Instead of Rs 18999 in First Sale May 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X