ரூ.15,000/-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன், இதுதான்.!

மீபத்திய ஹூவாய் ஸ்மார்ட்போன் தான் ஹானர் 9 லைட். எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி பின்புறம் மட்டுமில்லாமல், முன்[பக்கமும் இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

|

ஹூவாய் நிறுவனம் குறுகிய காலத்தில் பல இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க்கும் ஒரு நிறுவனமாகும். இதிலிருந்து ஹூவாய் நிறுவனத்தின் கேமராத்துறை சார்ந்த அதீத கற்றல் வெளிப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஹூவாய் நிறுவனம் அதன் தலைசிறந்த ஹானர் மற்றும் பி தொடர் சாதனங்களில் டூயல் கேமரா அமைப்பை வெற்றிகரமாக வழங்கி வருகிறது

ரூ.15,000/-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன், இதுதான்.!

குறிப்பாக நேர்த்தியான விலை பிரிவில் கிடைக்கும் ஹூவாய் நிறுவனத்தின் டூயல் கேம் ஸ்மார்ட்போன்களானது விலையை மீறிய அனுபவத்தை வழங்குகிறதென்பதே நிதர்சனம். அப்படியான ஒரு சமீபத்திய ஹூவாய் ஸ்மார்ட்போன் தான் ஹானர் 9 லைட். எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி பின்புறம் மட்டுமில்லாமல், முன்[பக்கமும் இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

ரூ.15,000/-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன், இதுதான்.!

இதன் நான்கு லென்ஸ் கேமரா செயலாக்கமானது சக்தி வாய்ந்த மற்றும் அறிவார்ந்த கேமரா மென்பொருள் மூலம் ஆதரிக்கப்படுறது. ஏன் கூட்டத்தை விட்டு ஹானர் 9 லைட் கேமராக்கள் வெளியே நிற்கின்றன என்பதை அறிந்தால், அதை நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

ஹானர் 9 லைட் ஆனது ஹூவாய் நிறுவனத்தின் இரண்டாம் குவாட் லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் ஆகும். இது சந்தையில் ரூ.15கே பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது பொக்கே விளைவுகளின் திறன் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா அமைப்பை வழங்குகிறது. முன் மற்றும் பின்புறத்தில் ஒரு 13எம்பி + 2எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை வழங்குகிறது. இதன் 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது பொக்கே விளைவை உருவாக்குவதற்கும், களத் தகவலை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. மேலும் இதன் பின்புற கேமரா பேஸ் டிடெக்ட் ஆட்டோபோகஸ் Phase Detect Autofocus (PDAF) அம்சத்திற்கு ஆதரவளிக்கிறது மற்றும் நொடிக்கு 30 பிரேம்கள் என்கிற வேகத்திலான 1080பி வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது.

எளிமையான கேமரா பயன்பாடு

எளிமையான கேமரா பயன்பாடு

ஒரு சிக்கலான கேமரா பயன்பாடு நிச்சயமாகஒரு சிறப்பான புகைப்பட அனுபவத்தை வழங்காது. அதை எ,மனதிற்கொண்டு உருவானதே ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் கேமரா ஆப். எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் கேமரா முறைகள் மற்றும் பில்டர்ஸ்களை அணுக இது வழிவகுக்கிறது. கேமரா திறக்கப்பட்ட மேல்பக்கத்திலேயே ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் க்வாட்-லென்ஸ் கேமரா அமைப்புகள் வெளிப்படும். அதாவது போர்ட்ரெய்ட் பயன்முறை, வைட் அப்பெர்ஷர் பயன்முறையில், மூவிங் பிக்சர் மற்றும் ன திரையில் தானாகவே படங்கள் மற்றும் அழகு முறை நகரும்.பியூட்டிப்பை ஆகியவைகளை அணுகலாம்.

பிரதான கேமரா அமைப்புகளையும் எளிமையாக அணுகலாம்

பிரதான கேமரா அமைப்புகளையும் எளிமையாக அணுகலாம்

கேமராவை திறந்து வெறுமனே ஸ்வைப் செய்வதின் மூலம் நீங்கள் இமேஜ் ரெசல்யூஷன், ஜிபிஎஸ், டைமர், தொடச் டூ கேப்சர் மற்றும் பல முக்கிய கேமரா அமைப்புகளை அணுகலாம். எடுக்கும் புகைப்படங்களில் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் இந்த அனைத்து வகையான பயன்முறைகளையும் கையாண்டு பார்க்கலாம். இந்த போட்டோ, ப்ரோ போட்டோ (கையேடு முறை), வீடியோ, ப்ரோ வீடியோ, எச்டிஆர், நைட் ஷாட், பனோரமா, லைட் பெயின்டிங், டைம்-லாப்ஸ், பில்டர்ஸ், வாட்டர்மார்க் மற்றும் பல கேமரா அம்சங்கள் அணுக கிடைக்கும்.

க்ரூப் செல்பீக்கள், பனோராமா செல்பீக்கள் மற்றும் சைகை ஆதரவு

க்ரூப் செல்பீக்கள், பனோராமா செல்பீக்கள் மற்றும் சைகை ஆதரவு

செல்பீ கேமராவை திறந்து, பனோரமா சுசெல்பீ உதவியுடன் நீங்கள் ஒரு க்ரூப் செல்பீயை கைப்பற்ற முடியும். மேலும் ஹானர் 9 லைட் கேமரா ஆனது சைகைகள் மற்றும் புன்னகை போன்ற 'கெஸ்டர்'களை உணர போதுமான அறிவார்ந்த கருவியாகும்.இதன் அர்த்தம் நீங்கள் உங்களின் கைகளை அசைப்பதின் மூலம் மற்றும் புன்னகைப்பதின் மூலமாக கூட செல்பீக்களை கைப்பற்றலாம்.

பின் மற்றும் பின்பக்க கேமராவில் அற்புதமான போர்ட்ரெய்ட்

பின் மற்றும் பின்பக்க கேமராவில் அற்புதமான போர்ட்ரெய்ட்

ஆழமான தகவலை உணரும் இதன் முன் மற்றும் பின்புற கேமராக்கள் வழியாக அற்புதமான பொக்கே விளைவுகளை கைப்பற்றலாம். பின்புற கேமராவில் 'போர்ட்ரேட் பயன்முறையைப்' பயன்படுத்தும் போதும் 'வைட் அப்பெர்ஷர்' பயன்முறையை உபயோகிக்கும் போதும் அல்லது செல்பீ கேமராவில் 'போர்ட்ரேட் பயன்முறையை' டாப் செய்யும் போதும் ஒரு மெய்நிகர் புகைப்படம் உங்களுக்கு கிடைக்கும்.

ப்ரோ பயன்முறை

ப்ரோ பயன்முறை

நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதில் இன்னும் ஒருபடி சாமர்த்தியமான பயன்முறைகளை தேடினால் ஹானர் 9 லைட் உங்களுக்கான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒரு கையேடு முறையில் ப்ரோ போட்டோ பயன்முறையை வழங்குகிறது உடன் ப்ரோ வீடியோ பயன்முறையையும் வழங்குகிறது. இந்த 'ப்ரோ போட்டோ' மற்றும் 'ப்ரோ வீடியோ' முறைகள் உங்களின் தனிப்பட்ட படப்பிடிப்பு தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது மீட்டரிங், ஷட்டர் வேகம், இவி, வைட் பேலன்ஸ் மற்றும் பிற மேம்பட்ட அமைப்புகளை சரிசெய்ய உதவுகிறது.

நைட் ஷாட் மற்றும்லைட் பெயின்டிங்

நைட் ஷாட் மற்றும்லைட் பெயின்டிங்

ஹானர் 9 லைட் உலகத்தை குறைந்த ஒளியிலும் கூட சிறப்பான முறையில் கைப்பற்ற உதவுகிறது. இதன் 'நைட் ஷாட்' பயன்முறையானது குறைவான ஒளி கொண்ட இடங்களில் சிறந்த படங்களைக் கைப்பற்ற உதவுகிறது. ஒளி நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும்போது நீங்கள் இதன் ஐஎஸ்ஓ மற்றும் எக்ஸ்போஷர் நேரத்தை சரிசெய்யலாம். இன்னும் சுவாரசியமாக இதன் லைட் பெயின்டிங் பயன்முறையானது ஒளிகளை கொண்டு விளையாட உதவும்.

சுவாரஸ்யமான பில்டர்ஸ்களுடன் விளையாடவும்

சுவாரஸ்யமான பில்டர்ஸ்களுடன் விளையாடவும்

கடைசியாக ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் பில்டர்ஸ்களை பற்றி காண்போம். இதன் ஒரு சாதாரண பில்டர் கூட உங்களின் புகைப்படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. அந்த அளவிற்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட 8 வெவ்வேறு பில்டர்ஸ்களுடன் இக்கருவி வெளிவருகிறது. மேற்கூறப்பட்ட அனைத்து காரணங்களினால் தான் ஹானர் 9 லைட் ஆனது ரூ.15,000/- என்கிற பட்ஜெட் விலைப்பிரிவிற்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

Best Mobiles in India

English summary
How to make the most out of quad-lens cameras on Honor 9 Lite. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X