உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?
உங்கள் ஆதார்அட்டை மற்றும் தொலைபேசி எண்ணை எடுத்துச் செல்லுங்கள், இந்த விவரங்களை கடையில் நியமிக்கப்பட்ட நபருக்கு வழங்கவும்.!
இந்தியாவின் அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கும் ஆதார்அட்டையில் மொபைல் போன் எண்ணை இனைப்பது போன்றவை சரிபார்க்க வேண்டும் என்று டெலிகொம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது . இப்போதுஇ ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு நுகர்வோர் செய்திகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, மேலும் மொபைல்எண்ணை ஆதார்அட்டை உடன் இணைக்கப்பட்டு அவற்றின் செயல்படுகளை சரிபார்க்கப்பட வேண்டும் என செய்திகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பல்வேறு சேவைகள் இதன் மூலம பெறமுடியும் என டெலிகொம் அமைப்பு கூறியுள்ளது. மேலும் அருகில் இருக்கும் பல்வெறு மொபைல்போன் கடைகளில் இந்த தகவலைப்பற்றி அறிந்து கொள்ளமுடியம்.
அடையாளச் சரிபார்ப்பு, அத்துடன் புதிய சந்தாதாரர்களுக்கான முகவரிகள் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றிற்கும் ஒரு பயனுள்ள செயல்முறை உருவாகியுள்ளது. இவை ஒரு வருடத்திற்குள், சரிபார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். என அரசாங்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவ்யைசி(kyc);
உங்கள் ஆதார்அட்டை பொருத்தமாட்டில் கேவ்யைசி(kyc) மூலம் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க நாட்டில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் டாட் (DoT) அறிவிப்பை அனுப்பியுள்ளது. மேலும் ஆதார் அட்டையில் மொபைல்போன் நம்பர்களை இணைப்பது கட்டாயமாகும். என அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ்:
முதலில் உங்கள் மொபைல் நெட்வொர்க்கின் மூலம் எஸ்எம்எஸ் வரும். அதன்பின் அருகில் இருக்கும் மொபைல்கடைக்கு சென்று ஆதார்அட்டையில் மொபைல் எண்களை இணைப்பது போன்றவை செயல்படுத்தவேண்டும்.

தொலைபேசி எண்:
உங்கள் ஆதார்அட்டை மற்றும் தொலைபேசி எண்ணை எடுத்துச் செல்லுங்கள். இந்த விவரங்களை கடையில் நியமிக்கப்பட்ட நபருக்கு வழங்கவும்.

சரிபார்ப்புக் குறியீடு:
அந்த நபர் உங்கள் எண்ணில் சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்புவார் மேலும் அந்த சரிபார்ப்புக் குறியீட்டை உறுதிசெய்யவும்.

கைரேகை;
பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு போன்றவை அவற்றில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்அட்டை:
அதன்பின் 24 மணி நேரத்திற்குள் இறுதி சரிபார்ப்பு எஸ்எம்எஸ் ஐப் பெறுவீர்கள். இப்போது உங்கள் தொலைபேசி எண் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








