சாம்சங் கேலக்ஸி எஸ் 5 இல் ஆன்டிராய்டு லாலிபாப் இன்ஸ்டால் செய்வது எப்படி

By Meganathan
|

ஆன்டிராய்டு கிட்காட் காலம் முடிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். கொஞ்ச காலம் முன்னாடி வரை ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பலரும் கிட்காட் ஓஎஸ் தான் பயன்படுத்திட்டு வந்தாங்க, இப்போ லாலிபாப் வந்ததும் எல்லாரும் ஓஎஸ் அப்டேட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

முதலில் கிட்காட் வெளியான போது கூகுளின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தனக்கென பிரான்ட் ஒன்றை உருவாக்கியது, இப்போ லாலிபாப் அதே போன்ற பிரான்டாக உருவாகிவிட்டது.

லாலிபாப் அப்டேட் இப்போ கிடைக்கின்றது என்றாலும் அனைவரிடமும் சென்றடைய சில காலம் ஆகும். நீங்க கேலக்ஸி எஸ் 5 வைத்திருந்தால் உங்களுக்கு தான் இந்த நல்ல செய்தி. ஆமாங்க கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட்போனில் லாலிபாப் அப்டேட் செய்ய முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 இல் ஆன்டிராய்டு லாலிபாப் இன்ஸ்டால் செய்யுங்க

ஆனால் ரூட் செய்தால் உங்க போனுக்கு இருக்கும் வாரன்டி செல்லாது, பிற்காலத்தில் வேற எந்த அப்டேட்டும் செய்ய முடியாது. இருந்தாலும் ரூட் செய்யவேன் என்றால், உங்க போனில் 80 சதவீத பேட்டரி இருக்கானு பார்த்து கொள்ளுங்கள் ஆன்டிராய்டு லாலிபாப்பில் புதிய சைனோஜென்மோட் M12 பயன்படுத்தப்படுவதால் உங்க போன் மெமரியை க்ளியர் செய்ய வேண்டும்.

உங்க ஆன்டிராய்டு போனில் பேக்கப் செய்வது எப்படி

எச்சரிக்கை: பின்வரும் செயல்களின் மூலம் உங்க போனுக்கு ஆபத்தி நேரிடலாம், அவ்வாறு நேர்ந்தால் எந்த நிலையிலும் கிஸ்பாட் அல்லது ஒன்இந்தியா பொறுப்பேற்காது.

இப்போ சேம்சங் கேலக்ஸி எஸ் 5 இல் ஆன்டிராய்டு லாலிபாப் இன்ஸ்டால் செய்வது எப்படினு பாருங்க

முறை 1

சைனோஜென்மோட் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் CM12 ஆல்பா சீரிஸ் கஸ்டம் ராம் மற்றும் கூகுள் ஆப்ஸ்களை உங்க கணினியில் டவுன்லோடு செய்யுங்கள், யுஎஸ்பி கேபிள் மூலம் உங்க போனையும் கணினியோடு இணைத்திடுங்கள்.

முறை 2

இப்போ ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 ஆல்பா CM12 கஸ்டம் ராம் சிப் பைலை உங்க போனின் மெமரி கார்டில் பேஸ்ட் செய்யுங்கள். அதன் பின் உங்க போன் ரூட் செய்யப்பட்டு க்ளாக்வர்க்மோட் ரிக்கவரி/TWRP டூல் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

முறை 3

போனை ஸ்விட்ச் ஆப் செய்து கணினியில் இருந்து கழற்றி விடுங்கள்

முறை 4

வழக்கமான ரிக்கவரி மோட் முறையை பின்பற்றுங்கள், இதற்கு வால்யூம் மேல் பட்டன், ஹோம் பட்டன் மற்றும் பவர் பட்டன்களை ஒன்றாக அழுத்துங்கள்

முறை 5

ரிக்கவரி மோடில் இருக்கும் போது போன் மெமரியை க்ளியர் செய்யுங்கள். ரிக்கவரி மோடை பயன்படுத்த நீங்க எப்பவும் வால்யூம் மற்றும் பவர் பட்டன்களை பயன்படுத்தலாம்

முறை 6

இப்போ வைப் கேச்சி பார்ட்டிஷன் மூலம் கேச்சி மெமரியை க்ளியர் செய்யுங்கள்

முறை 7

இப்போ திரும்பவும் க்ளாக்வர்க்மோட் ரிக்கவரி சென்று அட்வான்ஸ்டு ஆப்ஷனை தேர்வு செய்து வைப் டால்விக் கேச்சியை க்ளிக் செய்யுங்கள்

முறை 8

மீண்டும் ரிக்கவரி ஸ்கிரீனின் மெயின் மெனுவிற்கு வந்து இன்ஸ்டால் சிப் ப்ரம் எஸ்டி கார்டு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

முறை 9

இப்போ choose zip from sdcard ஆப்ஷனை தேர்வு செய்து எஸ்டி கார்டில் இருக்கும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ராம்.சிப் பைல் சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்

முறை 10

இன்ஸாடல் முடிந்ததும் +++++Go Back+++++ சென்று போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

இப்போ கொஞ்ச நேரத்தில் கேலஸ்கி எஸ் 5 பூட் முடிந்ததும் செட்டிங்ஸ் சென்று புதிய சைனோஜென்மோட் இன்ஸ்டாலேஷனை உறுதிப்படுத்துங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Install Android Lollipop on Samsung Galaxy S5. Here you will find some easy steps to Install Android Lollipop on Samsung Galaxy S5.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X