பட்ஜெட் விலையில் தரமுள்ள ஸ்மார்ட்போன் இதுதானுங்க மக்களே.!
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையல் தினசரி எதாவது ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது, இருந்தபோதிலும் லாபாம் மட்டும் கருத்தில் கொள்ளாமல் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன்களை ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தான் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் ஹானர் நிறுவனமும் சிறந்த ஸ்மார்ட்போன்களை தரமுடன் அறிமுகம் செய்துவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது காரணம் தரம் மட்டும் தான்.
சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 8எக்ஸ் சாதனம் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அட்டகாசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது, அதன்படி டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

விலைமதிப்பு:
இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-ஆக உள்ளது, விலைக்கு தகுந்தபடி சிறந்த வடிவமைப்பு மற்றும் டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும். பின்பு ஐபோனில்
இடம்பெற்றுள்ள அதே நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு தான் இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே மற்றும் பிக்சர் திர்மானம்:
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றுள் 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோனில் இருக்கும் நாட்ச் டிஸ்பிளே வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தரம் கொண்ட வன்பொருள் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ, கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக அருமையாக இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிபியு டர்போ டெக்னாலஜி.!
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஜிபியு டர்போ டெக்னாலஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி கேமிங் செயல்திறன் பொறுத்தவரை திரையை சார்ந்து இருக்கும், அதன்படி மென்மையான மற்றும் அதிவேக விளையாட்டுக்களை வழங்குவதற்கு ஜிபியு என்ற அம்சத்தை சார்ந்து தான் இருக்கும். அதன்படி கிளாஸ் கேமிங் அனுபவத்தை கொண்டுக்கும் வண்ணம் இந்த புதிய தொழிலநுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கிரிண் 710சிப்செட் மற்றும் ஜிபியு டர்போ இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3750எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே இன்டர்நெட் மற்றும் வீடியோக்களை அதிக நேரம் பார்க்க முடியும்.

டூயல் ரியர் கேமரா அமைப்பு:
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், அதன்படி 20எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல், மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்தவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வெளிசத்தில் கூட மிக அருமையாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதில் இடம்பெற்றுள்ள 2எம்பி செகன்டரி கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்க பயன்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி கொண்ட அசத்தலான செல்பீ கேமரா பொறுத்தப்பட்டள்ளது.

புதிய தொழில்நுட்பம்:
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 'Chip-on-film' (COF) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தொழில்நுட்பம் என்னவென்றால ஸ்மார்ட்போனில் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பில் பாணியில் வீடியோக்களை மற்றும் அனுபவத்தை விளையாட்டு ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயனர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications