போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பறிபோகும் அப்பாவிகளின் பணம்!
கரும்பு ஆலையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளியான விவேக் பால் சிங் என்பவரின் மொபைலுக்கு சமீபத்தில் வந்த ஒரு மெசேஜில் அவரது டெபிட் கார்டில் இருந்து பணபரிவர்த்தனை செய்ததாக இருந்தது.
கரும்பு ஆலையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளியான விவேக் பால் சிங் என்பவரின் மொபைலுக்கு சமீபத்தில் வந்த ஒரு மெசேஜில் அவரது டெபிட் கார்டில் இருந்து பணபரிவர்த்தனை செய்ததாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்தார். ஏனெனில் அந்த மெசேஜில் அவர் சென்னையில் அவரது டெபிட் கார்டை பயன்படுத்தி ஒரு மொபைல் வாங்கியதாக வந்த மெசேஜ் அது என்பது தான்.

விவேக் மட்டும் தான் இந்த விஷயத்தில் ஏமாந்தார் என்றில்லை. கல்யாண்பூர் என்ற பகுதியில் வசிக்கும் விஷாகா சென் என்பவர் தலைமை செயலகத்தில் பணிபுரிபவர். அவரது தனது வங்கியில் பணம் செலுத்த சென்றபோது அவரது வங்கி கணக்கில் குளிர்சாதனப்பெட்டி ஒன்று கொச்சியில் வாங்கியதாகவும், அதற்காக ரூ.14750 கழிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

27 பேர்களின் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது
டெபிட் கார்டு மூலம் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்தே செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை இதுபோன்ற அதிகமான டூப்ளிகேட் டெபிட் கார்டுகளை உருவாக்கி அதன்மூலம் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து திருடுபவர்கள் பொதுவாக பீகார், டெல்லி, சண்டிகார் போன்ற வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது இந்த முறைகேடு தென்னிந்தியாவிலும் பரவிவிட்டதாக லக்னோ சைபர் செல் அதிகாரிகள் தெரிவித்தனர். லக்னேவில் உள்ளவர்களிடம் இருந்து மட்டும் இதுவரை 27 பேர்களின் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கொச்சி, கோவை
இவை பெரும்பாலும் சென்னை, கொச்சி, கோவை, சேலம், பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து திருடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி 15 வரையிலான ஒன்றரை மாத காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து போலி டெபிட் கார்டுகள் மூலம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

சுமார் 13 லட்சம்
இந்த குறுகிய காலத்தில் இதுவரை சுமார் 13 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதில் பணத்தை பறிகொடுத்தவர்களில் அரசு ஊழியர்களும், குடும்பத்தலைவிகளும் அடங்குவர். பொருட்கள் வாங்கியதாக 22 வழக்குகளும் ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுத்ததாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபிஷேக் திவாரி
இந்த முறைகேடு மோசடியில் ஏமாந்தவர்களில் காவல்துறையை சேர்ந்தவர்களும் உண்டு. அபிஷேக் திவாரி எற லக்னோவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டரின் அக்கவுண்டில் இருந்தே ரூ.18500 ஆன்லைன் மூலம் திருட்டுத்தனமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியபோது, 'என்னுடைய டெபிட் கார்டில் இருந்து சேலத்தில் ஒரு லேப்டாப் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதேபோல் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் கபூர் என்பவரது அக்கவுண்டில் இருந்து ரூ.20 ஆயிரம் முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்து கொண்டே இருக்கும் நிலையில் போலீசார் இதுவரை ஒருவரை கூட கைது செய்யாமல் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லக்னோவின் சைபர் க்ரைம்
இதுகுறித்து லக்னோவின் சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி அபிநய் மிஸ்ரா கூறுகையில், 'இதுவரை நடந்த மோசடிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அதனை வைத்து தென்னிந்திய காவல்துறையினர்களுடன் இணணந்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இந்த மோசடியை ஒரு புதிய குழு தான் செய்து வருவதாகவும் விரைவில் அவர்களை பிடிப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.,


Click it and Unblock the Notifications








