ட்விட்டர் & பேஸ்புக் வீடியோ: ஆட்டோ ப்ளே-வை முடக்குவது எப்படி.?

பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் அம்சம் விரைவில் கொண்டுவரப்படும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

ட்விட்டர் நிறுவனம் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளம். ஃபேஸ்புக்குக்கு அடுத்தபடியாக இருப்பதும் ட்விட்டர் தான், இப்போது ட்விட்டர் பகுதியில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, அதன்படி த்ரெட்ஸ் எனும் புதிய அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது, இது ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ அதன்பின்பு நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட எளிமையாக இருக்கும்.

பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் அம்சம் விரைவில் கொண்டுவரப்படும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் ஸ்னூஸ் சிறப்பம்சம்
பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம் அல்லது க்ரூப்களை பின்தொடர்வதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் வரும் வீடீயோ ஆட்டோ ப்ளே-வை முடக்குவது பற்றிய செயல்முறைகளை பார்ப்போம்.

 ஆட்டோ ப்ளே- ட்விட்டர்- ஆண்ட்ராய்டு

ஆட்டோ ப்ளே- ட்விட்டர்- ஆண்ட்ராய்டு

வழிமுறை:1
முதலில் ட்விட்டர் பக்கத்தில் இடது புறம் இருக்கும் உங்கள் profile picture-பகுதிக்கு செல்வேண்டும்.

வழிமுறை-2:
அதன்பின்பு செட்டிங்கஸ் வழியே Data-என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-3:
அடுத்து Data-பக்கத்தில் உள்ள வீடியோ ஆட்டோ ப்ளே-வை தேர்ந்தெடுத்து நெவர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஆட்டோ ப்ளே- ட்விட்டர்- ஐஒஎஸ்:

ஆட்டோ ப்ளே- ட்விட்டர்- ஐஒஎஸ்:

வழிமுறை-1
முதலில் Cog-எனும் ஐகானைத் தட்டவும்.

வழிமுறை-2:
அதன்பின்பு செட்டிங்கஸ் வழியே Data-என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-3:
அடுத்து Data-பக்கத்தில் உள்ள வீடியோ ஆட்டோ ப்ளே-வை தேர்ந்தெடுத்து நெவர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்

  ஆட்டோ ப்ளே- பேஸ்புக்- ஆண்ட்ராய்டு:

ஆட்டோ ப்ளே- பேஸ்புக்- ஆண்ட்ராய்டு:

வழிமுறை-1:
மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும், பின்பு ஸ்க்ரோல் டவுன் செய்து ஆப் செட்டிங்ஸ் டாப் செய்யவும்.

வழிமுறை-2:
வீடியோ ஆட்டோ ப்ளே டாப் செய்யவும்.

வழிமுறை-3:
வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக ப்ளே ஆவதை நிறுத்த 'ஆப்' ஆப்ஷனை தேர்வு செய்யவும் ஆல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.

  ஆட்டோ ப்ளே- பேஸ்புக்- ஐஒஎஸ்:

ஆட்டோ ப்ளே- பேஸ்புக்- ஐஒஎஸ்:

வழிமுறை-1:
வலது கீழ் மூலையின் அருகில் மோர் என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனின் அருகில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும், அதன்பின்பு ஸ்க்ரோல் டவுன் செய்து அக்கவுண்ட் செட்டிங்ஸ் செல்லவும்.

வழிமுறை-2:
வீடியோஸ் அன்ட் போட்டோஸ் ஆப்ஷனை டாப் செய்யவும். பின்னர் ஆட்டோ ப்ளே ஆப்ஷனை டாப் செய்யவும்

வழிமுறை-3:
நெவர் ஆட்டோ ப்ளே வீடியோஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும் அல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to disable auto playing sounds for videos on Facebook Twitter ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X