Home
Mobile

பதிலடினா இப்படி இருக்கணும்.. புதிய iPhone.. 5.5மிமீ ஸ்லிம், 48MP Fusion கேமரா , A19 சிப், புது iOS 26 அப்டேட்!

ஆப்பிள் (Apple) அதன் அடுத்த பெரிய வெளியீட்டு நிகழ்வான அதன் ஐபோன் 17 சீரீஸ் (iPhone 7 Series) வெளியீட்டை நோக்கி நகர்கிறது. இந்நிகழ்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள போதிலும், ஐபோன் 17 சீரீஸ் குறித்த தொடர்ச்சியான லீக்ஸ் - ஏற்கனவே இருக்கும் எதிர்பார்ப்புக்ளுக்கும், ஆர்வங்களுக்கும் இன்னும் தீனிபோடுவது போல் உள்ளன!

ஆப்பிள் அதன் ஐபோன் 17 சீரீஸில் 4 மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் புத்தம் புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air). புதிய ஏர் மாடல் ஆனது பிளஸ் (Plus) மாடலுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிலடினா இப்படி இருக்கணும்.. புதிய iPhone.. 5.5மிமீ ஸ்லிம் டிசைன்!

மேலும் இது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மாடலுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சரியான பதிலடி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz ProMotion Refresh Rate) உடன் கூடிய 6.6-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்று வதந்திகள் பரவியுள்ளது.

இன்னும் சுவாரசியமான மேட்டர் என்னவென்றால் இது வெறும் 5.5மிமீ தடிமன் கொண்ட மிகவும் நேர்த்தியான பாடியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது அதாவது இது ஆப்பிளின் இதுவரை இல்லாத மிக மெல்லிய ஐபோன் (Apple's Slimmest iPhone) ஆக மாறும். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 5.8மிமீ தடிமன் மற்றும் டைட்டானியம் ஃபிரேம்-ஐ கொண்டுள்ளது.

இவ்வளவு ஸ்லிம் ஆன டிசைனை அடைய, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஏர் மாடலின் ரியர் கேமரா செட்டப்பை (Rear Camera Setup) எளிமைப்படுத்தக்கூடும். அதாவது உயர்தர முடிவுகளை வழங்க கணக்கீட்டு புகைப்படத்தை (Computational photography) பெரிதும் சார்ந்து, சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் கேமராவை (48MP Fusion Camera) பேக் செய்யலாம் என்று லீக்ஸ்கள் தெரிவிக்கின்றன. அறியாதோர்களுக்கு - இதைத்தான் நாம் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலிலும் பார்த்தோம்.

இதோடு சேர்த்து ஆப்பிளின் ஸ்டேபிள் ஐபோன் 17 சீரிஸில் உள்ள செல்பீ கேமரா 24எம்பி ஆக மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐபோன் 17 ஏர் மாடலில் இதை எதிர்பார்க்கலாமா என்கிற கேள்விக்கு பதில் இல்லை. ஒப்பிடுகையில், கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலில் 200எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸுடன் மிகவும் வலுவான கேமரா செட்டப் உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஏ19 சிப் (Apple A19 Chip) உடன் வரலாம். இது புதிய லிக்விட் கிளாஸ் யுஐ (Liquid Glass UI) மற்றும் ஏஐ அம்சங்களின் (AI Features) தொகுப்போடு வரும் ஐஓஎஸ் 26 (iOS 16) கொண்டு முழுமையாக இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்லிம் ஆக இருக்கும் அதே சமயம் வேகம் அல்லது நீண்ட ஆயுளில் எந்த சமரசமும் இருக்காது.

விலையை பொறுத்தவரை இந்த ஆண்டு ஆப்பிள் தனது விலை நிர்ணய உத்தியை மாற்றியமைக்கக்கூடும். ஐபோன் 17 ஏர் மாடலானது (iPhone 17 Air Price in India) இந்தியாவில் ரூ.99,900 க்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், இது பேஸிக் ஐபோன் 17 மாடலை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் 17 மாடலின் (iPhone 17 Price in India) விலை ரூ.89,900 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How Apple iPhone 17 Air Could Be Clear Response to Samsung Galaxy S25 Edge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X