Home
Mobile

Xiaomi, Samsung-லாம் ஓடப்போகுது.. 200MP கேமரா.. 2வது மினி டிஸ்பிளே.. உடையாத ரக்டு HOTWAV Mobile.. என்ன விலை?

ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தை மிகவும் சுவாரசியமான சந்தையாக மாறிவருகிறது. சியோமி (Xiaomi), சாம்சங் (Samsung) பிரபலமான நிறுவனங்களை மிஞ்சும் வகையில் சில பிராண்டுகள் அட்டகாசமான பிரத்தியேக ரக்டு மொபைல் (Rugged Mobile) மாடல்களை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில், ஹாட்வேவ் (HOTWAV) என்ற பிராண்ட் மிகவும் தனித்துவமான ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged smartphone) சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலே, ஹாட்வேவ் பிராண்டில் இருந்து வாங்கலாம் என்று மக்கள் நம்பும் அளவிற்கு இந்த பிராண்ட் உலகளவில் நல்மதிப்பை பெற்றுவிட்டது. இதற்கான முக்கிய காரணம், ஹாட்வேவ் பிராண்ட் அதன் போனில் பேக் செய்யும் அட்டகாசமான அம்சங்கள் தான்.

Xiaomi, Samsung-லாம் ஓடப்போகுது.. 200MP கேமரா.. 2வது மினி டிஸ்பிளே..

ஹாட்வேவ் சைபர் 15 ரக்டு ஸ்மார்ட்போன் (HOTWAV Cyber 15 Rugged Smartphone):

இந்த நம்பிக்கையான நிறுவனம் இப்போது சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களை மிஞ்சும் அளவிலான ஒரு புதிய ரக்டு போன் (rugged phone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஹாட்வேவ் சைபர் 15 ரக்டு ஸ்மார்ட்போன் (HOTWAV Cyber 15 Rugged Smartphone) என்ற பெயருடன் மிலிட்டரி கிரேட் தரத்தில் (Military grade quality) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 200MP கேமரா, பின்பக்க மினி டிஸ்பிளே, 12GB ரேம் + 12GB கூடுதல் ரேம், 256GB ஸ்டோரேஜ், 2TB மெமரி, பெரிய பேட்டரி உடைக்கவே முடியாத மிலிட்டரி கிரேட் தரம் என்று எல்லாமே அம்சங்களையும் ஹாட்வேவ் நிறுவனம் பட்ஜெட் விலையில் பேக் செய்துள்ளது. இந்த புதிய ஹாட்வேவ் சைபர் 15 (HOTWAV Cyber 15) என்ற சக்தி வாய்ந்த மொபைல் பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.6" இன்ச் அளவு கொண்ட 1080 x 2408 பிக்சல் திறன் உடைய FHD+ 2K டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் (MediaTek Helio G99 Processor) உடன் வருகிறது. இந்த சிப்செட் உடன் இந்த ஹாட்வேவ் சைபர் 15 ரக்டு ஸ்மார்ட்போன் மொத்தமாக 24GB ரேம் அம்சத்தை ஆதரிக்கிறது. இதில் 12GB இன்டர்னல் ரேம் ஆக வழங்கப்பட்டுள்ளது.

Xiaomi, Samsung-லாம் ஓடப்போகுது.. 200MP கேமரா.. 2வது மினி டிஸ்பிளே..

ஹாட்வேவ் சைபர் 15 ரக்டு ஸ்மார்ட்போன் விலை (HOTWAV Cyber 15 Rugged Smartphone Price):

எஞ்சிய 12GB ரேம் எக்ஸ்டர்னல் ரேம் அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த புதிய ஹாட்வேவ் சைபர் 15 ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை பெறுகிறது. இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இந்த ஸ்மார்ட்போன் 2TB வரையிலான எக்ஸ்டர்னல் மெமரியை (External memory) வழங்குகிறது. கேமராவில் இந்த போன் சியோமி மற்றும் சாம்சங்கிற்கு நிகராக செயல்பட்டுள்ளது.

காரணம், இதில் 200MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது சாம்சங் எச்பி3 ஐசோசெல் லென்ஸ் (Samsung HP3 ISOCELL lens) ஆகும். இது 2கே வீடியோ ரெக்கார்டின்ங்கை (2K video recording) ஆதரிக்கிறது. இதில் ஏஐ பூஸ்ட் நைட் மோட் (AI-Boost Night Mode), 24MP நைட் விஷன் கேமரா (night vision camera) போன்ற அம்சங்களும் உள்ளது. இதன் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த போனின் மற்றொரு சிறப்பம்சம் இதன் பின்பக்கத்தில் கேமராவை ஒட்டி இண்டாவது டச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது மொபைல் நோட்டிபிகேஷன், கிளாக், மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், போன்ற ஆதரவை வழங்குகிறது. இது 6280mAh பேட்டரி உடன் 33W-பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இன்னும் ஏராளமான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதன் விலை சலுகையுடன் இப்போது 170 டாலர்ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 14,000 விலையில் AliExpress வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HOTWAV Cyber 15 Rugged Smartphone With 200MP Camera 2nd Display Overtaking Xiaomi and Samsung Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X