Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 8560mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலாக ஹானர் எக்ஸ்9இ எஸ் (HONOR X9e s) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் மாடல்களுக்கு நிகராக டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9இ எஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்9இ எஸ் அம்சங்கள் (HONOR X9e s Specifications): 6.79 (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஹானர் எக்ஸ்9இ எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 800 நிட்ஸ் டிபிகல் பிரைட்னஸ், 1800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 6000 நிட்ஸ் ஏபிஎல் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 8560mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா!

மேலும், டைனாமிக் டிம்மிங் (Dynamic Dimming) சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட்டை இந்த ஹானர் எக்ஸ்9இ எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ ஏ810 ஜிபியு (Adreno A810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் கொடுக்கப்பட்டு உள்ளது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கேமராவில் ஹைலைட்ஸ் கேப்ச்சர் (Highlights Capture), மூவிங் போட்டோ (Moving Photo), ஏஐ போட்டோகிராபி (AI Photography), நைட் (Night) மற்றும் போர்ட்ராய்டு மோட் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த ஹானர் எக்ஸ்9இ எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8560mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 7.76 எம்எம் தடிமன் வருகிறது. மொத்தமாக 196 கிராம் எடை வருகிறது. பெரிய பேட்டரி இருந்தும், அல்ட்ரா பிரீமியம் மாடல்களில் கிடைப்பதை போலவே டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் & IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் & IP69K கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்9இ எஸ் ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஹானர் சவுண்ட் 7.3 (HONOR Sound 7.3) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), கிராவிட்டி சென்சார் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 1,499 சவுதி ரியாலாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.37,931ஆக இருக்கிறது. இப்போது, யுஏஇ மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற மார்கெட்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டிலும் ஹானர் ஸ்மார்ட்போன்கள் சில வருடங்களாக வெளியாகி வருகின்றன.

Best Mobiles in India

English summary
HONOR X9e s With 8560mAh Battery Snapdragon 6 Gen 4 Chipset Launched Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X