Home
Mobile

யாரு சாமி அவன்.. 11000mAh பேட்டரி.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

10000mAh பேட்டரி மாடல்களை தூக்கி சாப்பிடும்படி 11000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்9இ ப்ரோ (Honor X9e Pro) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, IP69K ரேட்டிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது.

இப்போது, மலேசிய மார்கெட்டில் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ வெளியாகி இருக்கிறது. பெரிய பேட்டரி மாடல்களுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு இருப்பதால், இந்த மாடலுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அல்ட்ரா பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்கும் மாடலாகவும் இந்த ஹானர் எக்ஸ்9இ ப்ரோ வெளியாகி இருக்கிறது.

யாரு சாமி அவன்.. 11000mAh பேட்டரி.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே!

ஏனென்றால், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, 10 மீட்டருக்கு அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. 3 மீட்டர்களுக்கு டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. 360 டிகிரியில் டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும்.

ஹானர் எக்ஸ்9இ ப்ரோ அம்சங்கள் (Honor X9e Pro Specifications): 6.8 இன்ச் (2788 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 10000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 5) சிப்செட் கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 812 ஜிபியு (Adreno 812 GPU) மற்றும் மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் உள்ளன.

மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி வைடு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 15X டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 11000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹானர் சவுண்ட் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. இப்போது, விலையை பார்ப்போம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,608ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,604ஆக இருக்கிறது. ராயல் பர்பிள் (Royal Purple), மிட்நைட் பிளாக் (Midnight Black), டவுன் கோல்டு (Dawn Gold) மற்றும் ரெட்டிஷ் பிரவுண் (Reddish Brown) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மலேசிய மார்கெட்டில் முதலில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Honor X9e Pro With 11000mAh Battery Snapdragon 6 Gen 5 Chip Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X