ஹானர் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 108எம்பி கேமரா.. 11000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்9இ ப்ரோ (HONOR X9e Pro) ஸ்மார்ட்போனை ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஹானர் எக்ஸ்9இ ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்9இ ப்ரோ அம்சங்கள் (HONOR X9e Pro specifications): 6.8-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2788×1280 பிக்சல்ஸ், 10000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 5 4nm) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் அட்ரினோ 812 ஜிபியு (Adreno 812 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
MagicOS 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம்
4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)) உள்ளிட்ட ஆதரவுடன் இந்த ஹானர் எக்ஸ்9இ ப்ரோ போன் வெளியாகி உள்ளது. IP69K + IP69 + IP68 + IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய ஹானர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 6.1, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்9இ ப்ரோ போனில் உள்ளன. மேலும் போனின் எடை 203 கிராம் ஆகும்.
11000எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும் மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஹானர் எக்ஸ்9இ ப்ரோ ஸ்மார்ட்போனின் போனின் ஆரம்ப விரை AED 1499 (இந்திய மதிப்பில் ரூ.38,480)-ஆக உள்ளது.
photo credit: honor, fonearena


Click it and Unblock the Notifications
