OG வறாரு ஒத்து.. 8300mAh பேட்டரி.. 108MP கேமரா.. ஸ்மார்ட்போன் மார்கெட் காலி.. புது HONAR போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் தூக்கி சாப்பிடும்படி 8300mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்9டி (Honor X9d) வெளியாக இருக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், IP69K ரேட்டிங்குடன் ரக்கட் மாடலாக களமிறங்க இருக்கிறது. இதுபோக 108 எம்பி கேமரா, வீகன் லெதர் பேனல் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9டி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் 24ஆம் தேதி இந்த ஹானர் எக்ஸ்9டி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மலேசிய மார்கெட்டில் களமிறங்குகிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம். மலேசியாவில் வெளியாகும் மாடல்கள் இந்தியாவில் வெளியாகும் என்பதால், இப்போது ஹானர் எக்ஸ்9டி மாடலுக்கான இங்கும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

ரெட் கலரில் வீகன் லெதர் பேனல், கோல்டன் கலர் மிடில் ஃபிரேம் போன்ற டிசைன் மட்டுமல்லாமல், ரக்கட் மாடலாக இந்த ஹானர் வெளியாகும் என்பதை அந்த நிறுவனம் வெளியீட்டு தேதியுடன் உறுதி செய்துள்ளது. இதில் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.
ஆனால், இது ஏற்கனவே சீனாவில் வெளியான ஹானர் எக்ஸ்70 (HONOR X70) ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாகும். ஆகவே, ஒட்டுமொத்த பீச்சர்களும் இப்போதே தெரிந்துவிட்டது. ஆனால், கேமராவில் அப்கிரேட் இருக்கிறது. சீன வெர்ஷனில் 50 எம்பி கேமரா கிடைத்தது. இதில் 108 எம்பி கேமரா கிடைக்க இருப்பது தெரிகிறது.
ஆகவே, மலேசியாவை போலவே இந்தியாவிலும் ஹானர் எக்ஸ்9டி வெர்ஷனாக இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவில் ஏற்கனவே ஹானர் எக்ஸ்9பி (Honor X9b), ஹானர் எக்ஸ்9சி (Honor X9c) போன்ற எக்ஸ் சீரிஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இதில் ஹானர் எக்ஸ்9டி மாடலும் சேர அதிக வாய்ப்புள்ளது.

ஹானர் எக்ஸ்9டி அம்சங்கள் (Honor X9d Specifications): இந்த பீச்சர்கள் எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் மட்டுமே. சீனாவில் வெளியான ஹானர் எக்ஸ்70 அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8300mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி வர இருக்கிறது.
6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வர இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் வருகிறது.
இதில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஹானர் நிறுவனத்தின் மேஜிக் ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP69K ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP66 ரேட்டிங் இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் கிடைக்க இருக்கிறது.
சீன மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,000 பட்ஜெட்டில் இருந்தது. மலேசிய மார்கெட்டில் ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்புள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி தெரிந்துவிடும். மலேசிய மார்கெட்டில் அடிப்படையில் இந்தியாவில் எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








