அலறி போச்சு மொத்தமா.. 8300mAh பேட்டரி.. 24GB ரேம்.. 108MP கேமரா.. 66W சார்ஜிங்.. புது HONOR போன்.. எந்த மாடல்?
மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படி 8300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 24 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் ஹானர் எக்ஸ்9டி (HONOR X9d ) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்9டி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மலேசிய மார்கெட்டில் இந்த ஹானர் ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கிறது. பிரீமியமான டிரிபிள் ரெசிஸ்டன்ட் பில்ட் குவாலிட்டி கொடுக்கிறது. ட்ராப், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஆகவே, 2.5 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. IPX9K ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், IP6X டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி எதிர்பார்க்க முடிகிறது. இதுபோக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களிலும் மிரளவிட்டுள்ளது.
ஹானர் எக்ஸ்9டி அம்சங்கள் (HONOR X9d Specifications): இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.79 இன்ச் (2640 x 1200) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன், டிசிஐ பி3 சினிமா கிரேடு கலர் காமட் கிடைக்கிறது.
இதுபோக 3840Hz PWM டிம்மிங் கிடைக்கிறது. சூப்பர் டைனாமிக் விவிட் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஹானர் எக்ஸ்9டி ஸ்மார்ட்போனில் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) உள்ளது.
மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. இந்த கேமராவில் அண்டர் வாட்டர் போட்டோ மோட் (Underwater Photo Mode) மற்றும் 4K எச்டி மூவிங் போட்டோ கோலாஜ் (HD Moving Photo Collage) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக ஏஐ ஸ்டார் போட்டோ எடிட்டிங் (AI Star Photo Editing) கிடைக்கிறது.
இதில் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ஐஸ் ஓப்பன் (AI Eyes Open), ஏஐ ரீமுவ் ரெஃப்ளெக்சன் (AI Remove Reflection), ஏஐ கட்அவுட் (AI Cutout) மற்றும் ஏஐ அப்ஸ்கேல் (AI Upscale) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதற்கு ஏற்ப மேஜிக் ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஹானர் எக்ஸ்9டி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாபாடிராகன் 6 ஜென் 4 (Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8,300mAh பேட்டரி, 66W சார்ஜிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,505ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,708ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








