Home
Mobile

அடிச்சான் பாரு Honor.. 6600mAh பேட்டரி, 108எம்பி கேமரா.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் கடந்த சில மாதங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ஹானர் எக்ஸ்9சி (Honor X9c) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது 6600mAh பேட்டரி, 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அடிச்சான் பாரு Honor.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்9சி அம்சங்கள் (Honor X9c Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்1,224 x 2,700பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மிகவும் தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset)உடன் இந்த புதிய ஹானர் போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ ஏ710 ஜிபியு (Adreno A710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

மேஜிக்ஒஎஸ் 8.0 (MagicOS 8.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர ஏஐ அம்சங்கள், எல்இடி பிளாஸ் மற்றும் பல சிறப்பான வசதிகள் கொண்டுள்ளது இந்த போன்.

IP65M தர டஸ்ட் மற்றும் 360 டிகிரி வாட்டர் ரெசிஸ்டன்ட் ( dust and 360-degree water resistance)வசதியுடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அடிச்சான் பாரு Honor.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

6600mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் வீடியோ கேம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர டூயல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஒடிஜி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

ஆனால் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். பின்பு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்9சி போனின் விலை ரூ.28,700-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.32,500-ஆக உள்ளது. குறிப்பாக ஜேட் சியான் (Jade Cyan, டைட்டானியம் பிளாக் (Titanium Black) மற்றும் டைட்டானியம் பர்பிள் (Titanium Purple)நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

photo credit: Honor

Best Mobiles in India

English summary
Honor X9c with Snapdragon 6 Gen 1 SoC launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X